குஜராத்மாநில காவல் துறையின் முன்னாள் தலைவர் ஆர்பி. ஸ்ரீ குமார் மீதான வழக்குகளை காங்கிரஸ்கட்சி தள்ளுபடிசெய்ததன் கைமாறாக அவர் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மீது போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டை சுமத்தினார்” என பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பான ஸ்ரீகுமாரின் தொலைபேசி உரையாடல் அடங்கிய சி.டி.,யை பாஜக தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டது.அதில், “போலி என்கவுன்ட்டர் வழக்கின் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதில் வழக்குரைஞர் ஒருவர் உதவிசெய்தார்’ என்று டிஜிபி. ஸ்ரீ குமார் பேசுவதை போன்ற உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாக்ஷிலேகி, “”19 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியவிண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ரகசிய தகவல்களை கசியவிட்ட வழக்கின் விசாரணை அப்போதைய நுண்ணறிவு பிரிவின் துணைஇயக்குநராக இருந்த ஆர்பி. ஸ்ரீகுமார் மேற்கொண்டார். இந்தவழக்கு தொடர்பாக விஞ்ஞானிகளை அடைத்து துன்புறுத்தியதாக அவர்மீது ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.
அதில் ஏழுகுற்றச்சாட்டுகளை 2004ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைநடத்தாமல் தள்ளுபடிசெய்தது. பின்னர் குஜராத்மாநில காவல்த் துறையின் தலைவராக ஸ்ரீ குமார் நியமிக்கப்பட்டபோது, அதற்குகைமாறாக மோடி மீது போலி என்கவுன்ட்டர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்” என லேகி கூறினார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது. |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.