இலங்கைபோரில் தொடர்புள்ளதாலேயே காமன்வெல்த் மாநாட்டில் மத்திய அரசு தீவிரம்காட்டுகிறது

 இலங்கைபோரில் தொடர்புள்ள காரணத்தாலேயே காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில் மத்திய அரசு தீவிரம்காட்டுகிறது என, தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஞாயிற்றுக் கிழமை கோவையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது :

தமிழகத்தில் பா.ஜ.க.,வின் வளர்ச்சி தற்போது 2 சவீதத்திலிருந்து 10சதவீதமாக உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் தமிழக அரசியலில் பா.ஜ.க முக்கியத்துவம்பெறும்; மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும். திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாடு, இந்தியளவில் ஒருதாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாசார்பில் யாரும் பங்கேற்க கூடாது. ஆனால் காங்கிரஸ் அரசு இந்தகாமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில் தீவிரம்காட்டி வருகிறது. பங்கேற்காவிட்டால் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரானபோரில் தங்களுக்குள்ளபங்கு வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமே இதற்கு காரணம்.

தமிழகத்தை பொருத்த வரை 1268 பஞ்சாயத்துகள் இங்குள்ளன. வரும் டிசம்பர் 1ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை இந்த பஞ்சாயத்துகளில் உள்ள வீடுகள்தோறும் பா.ஜ.க பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ்ஸின் ஊழல்கள், வாஜ்பாய் ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி, குஜராத்முதல்வர் நரேந்திர மோடியின் எதிர் கால திட்டங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு செய்யவுள்ளோம் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.