பா.ஜ.க பிரதமர்வேட்பாளர் நரேந்திரமோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்திய பிரதமர் மன்மோகன்சிங் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாஜக.,வின் ராஜஸ்தான் மாநிலபிரிவு வலியுறுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் ராம்லீலா மைதானத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற பேரணியில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, ஒருமாதத்திற்கு முன்பு ஜோத்பூர் பேரணியில் பேசிய பா.ஜ.க முதல்வர், சிறுபான்மையினரின் உரிமைகளை மீறியதாக ராஜஸ்தான் அரசுமீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக குறிப்பிட்டார். மேலும், சொந்தமாநில அரசின் நடவடிக்கைகளை சுய ஆய்வு நடத்த முன் வரவில்லை என்றும் நரேந்திரமோடியின் பெயரை குறிப்பிடாமல், பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் ஓங்கார்சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் குற்றச்சாட்டுகள் தவறான தகவலின் பேரில் அமைந்துள்ளன. பிரதமர் குறிப்பிடும் பேரணி, எப்போது எங்கு எந்தமுதல்வரின் முன்னிலையில் நடைபெற்றது என்பதை அவர் நிரூபிக்கவேண்டும்.
தவறான தகவலின்பேரில் பொய்யான குற்றச் சாட்டுகளை கூறிய பிரதமர், பா.ஜ.க.,விடமும் நாட்டு மக்களிடமும் அதற்காக மன்னிப்புகேட்க வேண்டும்.
உண்மைக்குப் புறம்பான தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உரையை பொதுக்கூட்டத்தில் பிரதமர் வாசித்தது துரதிருஷ்டமானது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.