இன்று இந்தியா வருகிறார் -அமெரிக்க துணை அதிபர்

4 நாள் பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இன்று(ஏப்.,21) டில்லி வருகிறார். அப்போது இரு தரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக ஆலோசனை செய்யப்பட உள்ளது.

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்ற பிறகு ஜேடி வான்ஸ் இன்று டில்லி வருகிறார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவரது மனைவி உஷா சிலிகுரி மற்றும் அவரது குழந்தைகள் உடன் வருகின்றனர். இதற்கு முன்னர், ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் துணை அதிபராக இருந்த ஜோ பைடன் 2013ம் ஆண்டு டில்லி வந்து இருந்தார். இதற்கு பிறகு, அந்நாட்டின் துணை அதிபர் தற்போது தான் டில்லி வர உள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை , பிரதமர் மோடியை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஜேடி வான்ஸ் சந்திக்க உள்ளார். அப்போது, இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை மற்றும் இரு தரப்பு பொருளாதார உறவு மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இந்த சந்திப்பின் போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் முக்கிய அதிகாரிகள் உடன் இருக்கின்றனர். வான்ஸ் உடன் 5 பேர் கொண்ட உயர் அதிகாரிகள் இருக்கின்றனர்.

ஜேடி வான்ஸ் பயணம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை ஆய்வு செய்யவும், பிப்., 13 ல் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்தின் போது வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு நாளையே ஜேடி வான்ஸ் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் செல்கிறார். 24ம் தேதி வரை அங்கு தங்க உள்ளார்.

22ம் தேதி, அமீர் மாளிகைக்கு செல்லும் ஜேடி வான்சுக்கு, பாரம்பரிய ராஜஸ்தானிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. 2.5 மணி நேரம் அங்கு தங்கியிருக்கும், அவர் கலாசார நிகழ்ச்சிகளை பார்க்க உள்ளார்.

தொடர்ந்து ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடக்கும் அமெரிக்கா இந்தியா தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இதில், இந்தியா மற்றும் அமெரிக்கா அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். அன்றைய தினம் ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாகு பகாடேவையும், முதல்வர் பஜன்லால் சர்மாவையும் ஜேடி வான்ஸ் சந்திக்கிறார்.

23ம் தேதி ஆக்ரா சென்று தாஜ்மஹாலை பார்வையிடுகிறார். 3 மணி நேரம் அங்கு தஙங்கியிருந்துவிட்டு மீண்டும் ராஜஸ்தான் வரும் அவர், 24ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்கா கிளம்பிச் செல்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...