பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான்

 பெரும்பாலும் ஆண் பெண்ணிடம் ஈர்க்கப் படுகிறான். அதே போன்று பெண்ணும் ஆணிடம் ஈர்க்கப் படிகிறாள். இது இயற்கையாக நடத்தும் சூட்சும விளையாட்டு.


உலகலாவிய உந்துதலில் வாழும் வரை அதுசரியே. ஆன்மீகம், ஆன்மா என்கிற இன்னொரு உலகமும் நம்முள்ளேயும் வெளியேயும் உள்ளதை . நாம் அறிவோம்.

அவ்வுலகில் ஆண்,பெண் என்ற பேதமில்லை. வெறும் ஆன்மாமட்டுமே. தத்துவார்த்தமாய் அதுவும்சரியே. நடுவில் கொஞ்சம்கவனமாக விழிப்புணர்வாய் ஆண் – பெண் வாழ்க்கையை நகர்த்துவோரே விசனப் படாமல் வாழ்வை வெல்கிறார்கள்.

உலகியல்வாழ்வில் சிக்குண்டு வாழ்வைவெறுக்கும் ஆண், பெண்ணை ஒரு புரியாதப் புதிர் என்பான். அவள் ஒருமாயை நம்பாதே என்று அனுபவச்சான்றிதல் வேறுகொடுப்பான். இன்னும் கொஞ்சம் சினம்கூடினால், பெண்ணா ? பிசாசா ? என்று கேள்வியாய் குழம்பிப்போவான்.

உங்களுக்கு ஓர் உண்மைதெரியுமா?

பெண்ணை ஓர் ஆன்மாவாக பார்க்கப்பழகியவனுக்கு அவள் எந்நாளும் சக்திதான். மாயையாக மாறவேமாட்டாள். உடலளவிலும் மனத்தலளவிலும் மட்டுமே பார்ப்பவனுக்கு அவள் எந்நாளும் மாயை தான் சக்தியாக மாறவே மாட்டாள்.

ஒருபெண், பணிவிலும் பரவசத்திலும் (பரம்பொருளின்வசம், என்றுணர்க) இருக்கும் வரை அவள், சக்தியின்வடிவம். அவள் மாயையாக மாறமாட்டாள். ஒருபெண், பயத்திலும் பலவீனத்திலும் இருக்கும் போதுதான் மாயையாக 'விசுவ ரூபம்' எடுக்கிறாள்.

ஒருகாலத்தில் பெண்ணை மாயையாகப்பார்த்து மருண்டவர்தான், பட்டினத்தடிகளார்.

பிற்காலத்தில் தெளிவுபெறும்போது அதே பட்டினத்தடிகளார் 'வாலை' எனப் பெறும் சக்தியாகப் போற்றிப்பாடுகிறார்.

"மூலத்து உதித்தெழுந்த
முக்கோண சக்கரத்துள்
வாலைதனை போற்றாமல்
மதிமறந்தேன் பூரணமே"

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...