மதவன்முறை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்புதெரிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க வகைசெய்யும் மத்திய அரசின் மத வன்முறை தடுப்பு சட்டமசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தாமல் இந்தமசோதாவை நிறைவேற்ற முயற்சிப்பது ஜனநாயகவிரோதம் என்றும் அவர் கண்டனம்தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக பாஜக.,வின் மூத்த தலைவரும் ராஜ்ய சபா எதிர்க் கட்சி தலைவருமான அருண் ஜெட்லி கூறி இருப்பதாவது: ‘நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலை கருத்தில்கொண்டு வகுப்புவாத அடிப்படையில் மக்களை பிளவு படுத்துவதாகவும், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மைமக்களை பிறப்பு அடையாளங்கள் அடிப்படையில் வேறு படுத்திக் காட்டுவதாகவும் இந்தமசோதா அமைந்துள்ளது.
இந்த மசோதாகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தப்படவில்லை. சோனியா காந்தி தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடுகவுன்சில் கூட்டத்தில் இந்த மசோதா முன் மொழியப்பட்டது. இந்த மசோதாவுக்கு அப்போதே கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுஅமைதி மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்பதால், இந்தமசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக அமைந்துள்ளது. அரசியல்சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பை அழிப்பதாக இந்தமசோதா அமைந்துள்ளதாக,
கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களின் முதல்வர் எதிர்ப்புதெரிவித்து இருந்தனர். தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தமசோதாவுக்கு கடும் எதிர்ப்பைதெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதி இருப்பதன் மூலம் இந்தபிரச்சினையில் பொதுவிவாதத்தை தொடங்கி வைத்து இருப்பது பாராட்டுக்கு உரியது. அவருடையகருத்துகள் நியாயமாகவும் பொருத்தமாகவும் உள்ளன என்றார்.
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.