முன்னாள் முதல்வர் கருணா நிதியின் பெயரை, திருவாரூர் தெற்கு ரதவீதிக்கு சூட்ட வேண்டும் என திருவாரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.இதில் எதிர்பார்ப்பையும் மீறி சுமார் 10000 பேர் திரளாக கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருணாநிதி பெயர் வைத்தால், அரசை இயங்க விட மாட்டோம் என கூறியிருந்தார்.
மக்களின் கடும் எதிர்ப்பும், பாஜக.,வின் தீர்க்கமான போராட்டமும் திமுக.,வை பின்வாங்க வைத்துள்ளது. ஆனால் மீசையில் மண் ஒட்டாத கதையாக அமைச்சர் நேரு கூறியதாவது: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதை கூட அறிந்து கொள்ளாமல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் என அரசியல் செய்கிறார்.என்று கூறியுள்ளார்.
கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |