தனியார் மின் நிறுவனத்திடம் இருந்து வெளிப்படையாக லஞ்சம்வாங்கிய இமாசலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங் மீது சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கோரிக்கை விடுத்துள்ளார். .
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இமாசலப் பிரதேசத்தில் தனியார் மின்சார நிறுவனத்தின் திட்டவிரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்காக முதல்வர் வீரபத்ரசிங் ரூ.1.5 கோடி மற்றும் ரூ.2.4 கோடியை அடுத்தடுத்து லஞ்சமாக பெற்றுள்ளார். அந்நிறுவன உரிமையாளரிடம் இருந்து இந்தப்பணத்தை தம் பெயரிலும் மனைவி பிரதீபாசிங் பெயரிலும் காசோலைகளாக அவர் வாங்கியுள்ளார்.
இது தவிர, அந்த மின்சாரநிறுவன உரிமையாளர் நடத்தும் மற்றொரு நிறுவனத்தில் வீரபத்ரசிங்கின் மனைவியும் பிள்ளைகளும் பங்குதாரர்களாக்கப்பட்டுள்ளனர்.
அவரது நிறுவனத்துக்கு மாநிலஅரசு அளித்த ஒப்புதலுக்காக முதல்வர் குடும்பத்தினருக்கு நிறுவனத்தில் பங்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இந்த வெளிப்படையான ஊழல்தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளனர் என்பதை அறியவிரும்புகிறேன்.
இது காங்கிரஸ்கட்சிக்கும் சோனியா மற்றும் ராகுலுக்கும் வைக்கப்பட்டுள்ள பரிசோதனையாகும். இந்த ஊழல்தொடர்பான உண்மைகளை கண்டு அவர்கள் கோபத்தை காட்டுவார்களா? சமீபத்தில் ஆதர்ஷ்ஊழல் விவகாரத்தில் அவர்கள் காட்டியகோபம் வெறும் நாடகமா? உண்மையான மன வெளிப்பாடுதானா? என்பது இந்தவிவகாரத்தில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கையே காட்டும் என்றார் அருண் ஜேட்லி.
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.