காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் தேர்தல் பிரசாரக் குழு தலைவராகமட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, காங்கிரஸ் கட்சியின் பிரதமர்வேட்பாளராக ராகுல் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது இந்த பரபரப்பான சூழலில் காங்கிரஸ் காரியக்கமிட்டியின் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ்சின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஜனார்த்தன திவேதி, ராகுல்காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று கூறி பலரது எதிர் பார்ப்புகளுக்கும், பல்வேறு யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைத்தார்.
மாறாக மக்களவை தேர்தல் பிரசாரக்குழுத் தலைவராக ராகுல் பணியாற்றுவார் என்று காரியக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக திவேதி குறிப்பிட்டார்.தேர்தலுக்கு பிறகே பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
அதேநேரத்தில், காங்கிரஸ்சியின் இந்த முடிவை வரவேற்றுள்ள பாஜக, தற்போதுதான் காங்கிரஸ் கட்சி சரியானமுடிவை எடுத்திருப்பதாக கூறியிருக்கிறது.
நரேந்திரமோடிக்கு நிகராக ராகுல் காந்தியை ஒப்பிட அக்கட்சியே தயாராக இல்லை . தோல்விபயமே காங்கிரஸ் கட்சியின் இந்தமுடிவுக்கு காரணம் என்று பாஜக தெரிவித்துள்ளது
காங்கிரஸ் கட்சியின் அதிகாரமிக்கத் தலைவர் ராகுல்காந்தி என்று தெரிந்தநிலையில் ஏன் அக்கட்சி இந்த அறிவிப்பை செய்திருக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளது மதசார்பற்ற ஜனதாதள கட்சி.
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.