பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்த போது, மோடியின் பேச்சையும், ப.சிதம்பரத்தை அவர் விமர்சனம்செய்த விதத்தையும் வைகோ பாராட்டினார். நரேந்திரமோடி கூட்டத்திற்கு நேற்று வைகோ போகவி்ல்லை. ஆனால் இரவில் மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்கு போய் மோடியை சந்தித்துப்பேசினார்.
இது குறித்து மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிய வருவதாவது; இந்தியில் நீங்கள் உரையாற்றும் நிமிடங்களில் அம்மொழியை புரிந்து கொள்ளாதவர்களைக்கூட நீங்கள் எழுப்பும் உணர்ச்சிமிக்க குரல், அதன் தொனி, உங்களுடைய கரங்களும் முகமும் வெளிப்படுத்தும்பாவனை மக்களை வசீகரித்தது.
நீங்கள் ஆற்றிய உரை, உன்னதமான சொற்பொழிவாகும்" என்று வைகோ கூறியதற்கு மோடி, "மிகச்சிறந்த பேச்சாளரான நீங்களே பாராட்டுவது மகிழ்ச்சி தருகிறது" என்று கூறியுள்ளார்
"உங்கள்பேச்சில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மாநில உரிமைகளை நசுக்குவதை கண்டித்ததும், கூட்டாட்சி தத்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசியது நாட்டுக்கு மிக அவசியமான கருத்தாகும்" என்று வைகோ கூறியபோது, "தமிழ்நாட்டுக்கு இந்தக்கருத்து மிகவும் அவசியமாயிற்றே" என்று மோடி கூறியுள்ளார்.
"தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கொல்லப் படுவதையும், அதைத்தடுக்காத மத்திய அரசின் கையாலாகாத தன்மையைப் பற்றிச்சாடியதும், நதிகள் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்தியதும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்றகட்சிகள் ஊழல்செய்து அதனால் பலன் பெற்றதை பற்றியும் நீங்கள் கூறியதோடு, தன்னை மேதையாகக் கருதிக்கொள்ளும் மறுவாக்கு எண்ணிக்கை அமைச்சர் ப.சிதம்பரத்தை கிண்டல் செய்த முறையும் பேச்சின் சிறப்பான முத்திரைகள்'' என வைகோ தெரிவித்துள்ளார்.
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.