யாருடைய தோளிலும் ஏறி பயணம்செய்யும் நிலையில் பாஜக இல்லை

 ஒரு சில நாட்களுக்குள், பாஜக., கூட்டணி முடிவாகிவிடும். பாஜக.,வுடன் கூட்டணி வைப்பவர்களுக்குத்தான் லாபம். யாருடைய தோளிலும் ஏறி பயணம்செய்யும் நிலையில் நாங்கள் இல்லை,'' என்று தமிழக பாஜக., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட, பாஜக., செயற்குழுக் கூட்டம், மாவட்ட தலைவர் பல ராமன் தலைமையில், நடந்தது. கூட்டத்தில், பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: கூட்டணி வைப்பவர்களுக்கு தான் லாபம் தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளிலும், பாஜக., பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடியே போட்டியிடுகிறார் என்ற சிந்தனையுடன், கட்சியினர் உழைக்கவேண்டும். பாஜக.,வுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு லாபம்.

யாருடைய தோளிலும் ஏறி பயணம்செய்யும் நிலையில் நாங்கள் இல்லை. அனைவருடனும் கைகோர்த்து பயணம்செய்ய விரும்புகிறோம். கூட்டணி சம்பந்தமாக, தேமுதிக., – பாமக., வுடன் பேசி வருகிறோம். கூட்டணி பேச்சுக்கு, ஒருமுற்றுப்புள்ளி வைக்கவே, டில்லி சென்றோம். ஒருசில நாட்களுக்குள், கூட்டணி முடிவாகிவிடும்.

தொண்டர்கள் ஒவ்வொரு பகுதியிலும், சுற்றுப்பயணம் செய்து, ஓட்டுகளை சேகரிக்கவேண்டும்.வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா? தொண்டர்களிடையே கருத்துவேறுபாடு இருக்கலாம். அதை ஓரம் கட்டிவிட்டு, ஒருமித்த சிந்தனையுடன் உழைத்து, வெற்றிபெற பாடுபடவேண்டும். பாஜக.,வுக்கு, இந்த சந்தர்ப்பத்தை விட்டால், வேறுசந்தர்ப்பம் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதனால், தொண்டர்கள் களப் பணியாற்றி வெற்றிபெற பாடுபடவேண்டும். என்று பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.
தி.மு.க.,வைச் சேர்ந்த, 100 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...