ஆர். எஸ். எஸ்ஸைப் பற்றி தெரிந்து கொள்வோம்

 ஆர். எஸ். எஸ்ஸைப் பற்றி தெரிந்து கொள்வோம் இன்று நரேந்திர மோடியை குற்றம சாட்டுகிறவர்களெல்லாம் குறிப்பிடதவராத ஒரு செய்தி நரேந்திர மோடி ஒரு ஆர். எஸ். எஸ் காரர். நரேந்திர மோடி சிறந்த நிரவாகியாக இருக்கலாம் ஆனால் அவர் அடிப்படையில் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரர். நரேந்திர மோடியின் கருத்தெல்லாம் ஆர். எஸ்.எஸின் கருத்து. எனவே அது ஏற்புடையதாகது. இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலையை பார்பதற்கு முன்னர் ஆர். எஸ். எஸ்ஸைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

 

உலகில் தோன்றிய பல தலை சிறந்த நாகரிகங்கள் எல்லாம் இன்று இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய்விட்டது. எகிப்திய நாகரிகம் இன்று இல்லை. சுமேரிய நாகரிக கானமல் போய் விட்டது. கிரேக்க, ரோமானிய நாகரிகங்களைப் பற்றி நாம் சரித்திர புத்தக்தில் மட்டுமே படித்து தெரிந்துகொள்ளமுடியோம்.

பல ஆயிரக் கணக்கான ஆண்டுகள் ஆகியும் அழியாமல் தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு நாகரீகம் என்றால் அது இந்திய நாகரீகம் தான். இந்திய கலச்சாரமும் பண்பாடும் மிகவும் தொன்மையானது. எண்ணிலடங்கா படை எடுப்புகள் நடைப்பெற்றும் இன்றும் கம்பீரமாக தோற்றமழிக்கும் ஒரு தேசமென்றால் அது பாரத தேச்சம் தான்.

அன்னிய படை எடுப்புகளில் ஆயிரம் ஆண்டுகள் அடிமை பட்டிருந்த பாரத தேசம் சமீபத்தில்தான் நீண்ட ஒரு போராட்டத்திற்கு பிறகு விடுதலைப் பெற்றது. சுமார் 700 ஆண்டுகள் பாரதம் இஸ்லாமியர்களிடம் அடிமைப்பட்டிருந்தது. பின்னர் சுமார் 300 ஆண்டுகளுக்கு பாரதம் ஐரோப்பியர்களின் (குறிப்பாக பிரித்தானியர்களின்) காலணியாக இருந்தது. 1000 காலம் அன்னியர் ஆட்சியில் பாரதம் இழந்தது சொல்லில்லடங்காது.
அகண்ட பாரதம் என்று அழைக்கப்படும் ஒரு பெரிய தேசம் இன்று அதன் எல்லையிலிருந்து சுருங்கிவிட்டது. மேற்குபக்கத்தில் பாரதத்தின் அரனாக இருந்த அஃப்கானிஸ்தானும், பாக்கிஸ்தானும் இன்று தனி நாடுகள். கிழக்கில் வங்காளத்தின் ஒரு பகுதி தனியாக பிரிந்து வங்கதேசம் என்ற ஒரு தனி நாடாக ஆனது.

சென்ற ஆயர வருடத்தில் கோடிக் கணக்கான ஹிந்துக்கள் வன்முறையிலும், நயவஞ்சகத்தாலும் அப்பிரகாம மதத்தவர்களால் மதம் மாற்றம் செய்யப்பட்டார்கள். ஹிந்துக்களின் கலச்சாரம் மறக்கடிப்பு செய்யப்படன. அவர்களின் பெருமைகள் மங்கடிக்கப்பட்டன. ஹிந்துக்கள் அவர்களது பெருமையை மறந்தார்கள், தன்மானத்தை இழந்தார்கள். ஹிந்துக்கள் என்றென்றும் அடிமைப்பட்டவர்கள் என்ற இழி நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

சிறிது சிறிதாக இருட்டடிப்பு செய்யப்பட்ட கொண்டிருந்த ஹிந்து சமுதாயத்தில் விடிவெள்ளியாக சில புரட்சியாளர்கள் தோன்றினார்கள். மற்ற நாடுகள் போல் இந்தியாவில் ஆயுத புரட்சி நடைபெறவில்லை. ஆண்மீக புரட்சி ஏற்பட்டது. ஈஷ்வர் சந்திர வித்தியாசாகர், தயானந் சரஸ்வதி, இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், பால கங்காதர திலகர், அரவிந்தர், சுப்ரமணிய பாரதியார் நாராயண குரு போன்ற மகாங்கள் பாரதத்தில் தோன்றி பாரத தேசத்தை புணர் அமைத்தார்கள். பாரத தேசத்தின் இன்றைய நிலைக்கு அன்னியர்கள் மட்டும் காரணமல்ல இந்தியர்களும். நம்முடைய சாதி சண்டை சச்சரவுகள் அன்னியர்களுக்கு சாதகமாக போய்விட்டது. நாம் மீண்டும் பெருமை மிக்க தேசமாக வேண்டுமென்றால் நம்முடையே குறைகளை கழையவேண்டும் என்று போதித்தனர். பாரதத்தின் சுதந்திரத்திற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆங்கிலேயர்களிடம் போராடி தங்களது இன்னுயிர்களை நீத்தனர்.

ஒரு அன்னிய சக்தியிடம் சுதந்திரம் பெற்று இன்னொறு அன்னிய சக்தியிடம் அடிமைபட்டு கிடப்பதே ஹிந்துக்களின் நிலையாக இருந்தது. இந்த நிலையிலிருந்து ஹிந்துக்கள் மீளவேண்டும் என்றால் அவர்களுக்குள் ஒற்றுமை வரவேண்டும். ஹிந்துக்கள் தங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை விடுத்து தேசம் தான் முக்கியம் என்ற உணர்வு கொண்டவர்களாக இருக்கவேண்டும். அனைத்து ஹிந்துக்களும் ஜாதி பேதமின்றி ஒரே குடையின் கீழ் செயல்படவேண்டும். இதற்கு ஹிந்துக்களிடம் ஒழுக்கமும், தேசிய பற்றும் தேவை. இதை செயல்படுத்த உறுவாக்கப்பட்டதுதான் ஆர். எஸ். எஸ்.

இராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் என்பதின் சுருக்கம் தான் ஆர்.எஸ்.எஸ். இதன் உறுப்பினர்கள் சுயம் சேவகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஆர். எஸ்.எஸ். தொடுங்கப்பட்ட வருடம் 1925. ஆர்.எஸ்.எஸ்சை உருவாக்கியவர் கேஷவ் பலிராம் ஹெட்கேவார். ஹெட்கேவார் ஒர் மருத்துவர். ஆனால் அவர் மருத்துவ பணியை ஆற்றாமல் சமூகப் பணியை மேற்கொண்டிருந்தார். ஆரம்ப காலத்தில் அங்கிலேயர்களூக்கு எதிராக போராடிய புரட்சியாளர்களுடன் சேர்ந்து ஹெட்கேவாரும் பல புரட்சிகர செயலகளில் ஈடுபட்டார். பின்னர் காங்கிரசில் சேர்ந்து பால கங்காதர திலகர் பிரிவுக்கு ஆதரவாக செயல் பட்டார் (காங்கிரச்ல் அப்பொழுது இரு பிரிவுகள் இருந்தன ஒன்று திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரஸ் மற்றொன்று கோபால கிருஷ்ண கோகுலே தலைமையிலான் மிதவாத காங்கிரஸ்). ஹெட்கேவார் ஹிந்து மகாசபா மற்றும் ஹிந்து குடியரசு சங்கத்திடனிடனும் தொடர்பில் இருந்தார். ஹெட்கேவார் காங்கிரஸ்ஸின் ஒத்துளுயாமை இயக்கித்தில் பங்குகொண்டு சிறைக்குச்சென்றார்.

காங்கிரஸ்சில் காந்தியின் நடவடிக்கைகள் ஹெட்கேவாருக்கு பெறும் ஏமாற்றத்தை தந்தது. கிலாஃபட் இயக்கத்தில் காந்தி பங்குகொண்டு முஸ்லீம்களை சமதான படுத்தும் செயல் முடிவில் வகுப்புவாதத்தில் வந்து முடியும் இதனால் ஹிந்துக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று என்னினார். எனவே ஹெட்கேவார் காங்கிரசை விட்டு விழகினார். பின்னர் 1925 ஆம் ஆண்டு விஜயதசமி அன்று மகராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தோற்றிவித்தார் ஹெட்கேவார்.

ஆர். எஸ். எஸ். ஒரு தேசிய தன்னார்வ அமைப்பு. இதனுடைய கொள்கை தேசத்திற்காக தன்னலமற்ற சேவை. இதன் சித்தாந்தம் வாசுதேவ குடும்பகம் – உலகம் அனைத்துமே ஒரு குடும்பம். பாரத கலாச்சாரமும், பண்பாடும் பெருமை க்குறியது அதை பாதுகாக்க வேண்டும் என்பது ஆர். எஸ். எஸ்ஸின் குறிகோள். ஆர். எஸ்.எஸின் உறுப்பினர்கள் சுயம்சேவகர்கள் என்று அழைக்கப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ்ஸில் உறுப்பினராக வேண்டும்மென்றால் அருகில் இருக்கும் ஷாகாவில் (கிளையில்) சேர்ந்துகொண்டாள் போதுமானது. ஆர். எஸ். எஸ். தன்னிடம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. சுமார் 60 லட்சம் உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில இருப்பதாக நம்பப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவர் சர்சங்ஷாலக் என்று அழைக்கப்படுவார். நிகழ்வில் இருக்கும் தலைவர்தான் அடுத்த தலைவர் யார் என்று முடிவெடுப்பார்.

ஷாக்காக்கள் தினந்தோறும் பொது இடங்களில் ஒரு மணி நேரம் நடைபெறும். காக்கி நிற அரை கால் சட்டையும், வெள்ளை நிறக் கை சட்டையும், கருப்பு நிற காந்தி குள்ளாவும் தான் சயம்சேவகர்களின் சீறுடை. ஷாகா கூட்டப்பட்ட பிறகு காவி கொடி ஏற்றப்படும். அதற்கு பகவ துவாஜ் என்று பெயர். இந்த காவி கொடி தர்மம், முன்னேற்றம், வெற்றி, அறிவு, தியாகம், வீரம் ஆகியவற்றை குறிக்கும். காவி கொடியை சுற்றி நின்று சுயம்சேவகர்கள் கொடி வணக்கம் செய்வார்கள்.பின்னர் சுயம்சேவகர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். அதை தொடந்து வயதிற்கு ஏற்றவாறு குழுக்களாக பிரித்து உடல் பயிற்சி, யோகா, தற்காப்பு கலை போன்றவை சொல்லித்தரப்படும். குழந்தகள் விளையாடுவார்கள். பின்னர் சயம்சேவகர்கள் பவணி வருவார்கள். அது முடிந்த பிறகு சயம்சேவகர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு தேசப்பற்றை தூண்டும் பாடல்களை கூட்டாக பாடுவார்கள். பாரத் தவப்புதல்வர்கள், ஞானிகளி வாழ்க்கை வரலாறுகள் அவர்களது பொன்மொழிகள் போன்றவை அனைவருக்கும் எடுத்துறைக்கப்படும். பாரத தேசத்தின் பெருமைகள் எடுத்துரைக்கப்படும். தேசப்பபற்று போதிக்கப்படும். சமூகத்தில் எப்படி பொருப்புள்ள குடிமகனாக இருக்கவேண்டும் என்று சொல்லித்தரப்படும். முதல் உதவி செய்வதிலும், சமுக சேவை செய்வதிலும் பயிர்ச்சி வழங்கப்படும். தேச முக்கியத்துவம் கொண்ட விவகாரங்களும், தினசரி நிகழ்வுகள் விவாதிக்கப்படும். பாரத தேசம் ஓங்கி வளர இறைவனிடம் பிரார்த்திக்கப்படும். முடிவில் காவிக் கொடி இறக்கபட்டு கூட்டம் கலைக்கப்படும்.

One response to “ஆர். எஸ். எஸ்ஸைப் பற்றி தெரிந்து கொள்வோம்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...