நேர்மையுடன் நடந்து கொள்வதாகக் கூறிவரும் காங்கிரஸ் கட்சி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைவர்களை களமிறக்குகிறது என பாஜக குற்றம் சுமத்தியுள்ளது . இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அருண் ஜேட்லி கூறியதாவது:
சண்டிகார் தொகுதியில் போட்டியிடும் ரயில்வே முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சால், இமாசலபிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள லாலுபிரசாத் யாதவ் உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். ரயில்வே தேர்வுவாரிய முறைகேட்டில் பவன்குமார் பன்தால் மீது குற்ரம் சுமத்தப்பட்டதை அடுத்து அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகினார்.
ஆதர்ஸ் ஊழலில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் அசோக்சவாண் மீது குற்றம் சுமத்த சி.பி.ஐ அனுமதிகோரியது. ஆனால் அந்தமாநில அரசை காப்பாற்றும்நோக்கில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது பாராஙுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சாப்பில் அசோக்சவாண் போட்டியிடுகிறார். வீரபத்ர சிங் மீதான குற்றச்சாட்டுக்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று அருண்ஜேட்லி கூறினார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.