{qtube vid:=VH8NXxd8wbQ}
{qtube vid:=hh_tziyFNX4}
{qtube vid:=k6-3ekj-yTc}
{qtube vid:=BrBcWcByfT4}
{qtube vid:=xRd_HX2P_M0}
{qtube vid:=HOV3ucAlwiQ}
{qtube vid:=_vPnKFhIgbg}
மோடி பேசியதாவது. “நான்-சோவின் ரசிகன்” என்றார். நாட்டில்-நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது- தமிழகத்தில் சோராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து- எனது நண்பர்கள் மூலம்- அறிந்தேன். அப்போதுதான் சோ குறித்து தெரிந்து* கொன்டேன். தமிழக பாஜகவிற்கு-சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும்- அதை சுட்டி காட்ட அவர் தயங்குவதில்லை என்றார்.
குஜராத்தில் என்ன சாதனைகள்- செய்தார் என்று அழகாகப் பேசினார். அவரின்-பேச்சு சோவின் பேச்சைவிட நன்றாக இருந்தது.
“குஜராத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிசெய்ய, ‘ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றபட்டது. இதன் மூலம் தற்போது 24மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம்-நடைபெறுகிறது. குஜராத்தில் வருவது ஆர்காடு-மின்சாரம் இல்லை, அது 24 மணி நேரம் வரும் மின்சாரம்.
தேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும்? எப்படி ஓட்டு சேகரிக்க-வேண்டும்? என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே-மக்களுக்கு தேவையான தொண்டுகளைசெய்ய வேண்டும். அதன் மூலம், மக்கள்-இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு-என்பது குறித்து சிந்தித்து பொது தொண்டு ஆற்றினால் தேர்தல்பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடிவரும்.
700நாட்களில் 1400கீமீ தூரம் குழாய் போட்டிருக்கேன். அதில் கலைஞர் குடும்பத்துடன் காரில்போகலாம்; அவ்வளவு அகலம் என்றார்.
குஜராத்தில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல்-தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துவதால் லஞ்சத்தை ஒழித்திருக்கிறோம்*. அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக-இருப்பதாலும், எனதுஅறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க -முடிவதாலும் எங்கும்லஞ்ச, லாவண்யத்திற்கு இடமேஇல்லை. மகாராஷ்டிரா-குஜராத் எல்லையில் வாகன பரிசோதனை செய்யுமிடம் (செக்-போஸ்ட்)உள்ளது. எங்களது எல்லையில் உள்ள செக்போஸ்டை 24மணி நேரமும் தகவல்தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பதால், மகாராஷ்டிரா மாநில செக்போஸ்ட் வருமானம் 200கம்மியாக கிடைக்கிறது, என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
“பெண்-கல்வியில் நாட்டிலேயே 20வது மாநிலமாக குஜராத்இருந்தது. தற்போது பெண் கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 %மாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில்படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம்-49 சதவீதத்தில் இருந்து 3சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஜூலை மாதம் 13, 14, 15 தேதிகளில் நல்ல வெயில் இருக்கும். மற்றவர்கள் சுவிஸுக்கு போகும்போது, நான் குக்கிரமத்துக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். விரைவில் 3% லிருந்து 0% ஆகும்,” என்றார்.
2010க்குள் எல்லா கிரமத்துக்கும் அகலபட்டை வரும் என்றும் சொன்னார்.
மதச்சார்பின்மை குறித்து பல்வேறு-கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவகையில் மதச்சார்பின்மைக்கு பல்வேறு விளக்கம் அளித்து-வருகின்றனர்.
சிலர் சிறுபான்மையினருக்குஉதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களை தாக்குவது-மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில்- தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை எனபல்வேறு விளக்கங்கள் அளிக்கபடுகின்றன.
மீடியா இவ்வளவு-நல்லது சொல்லியிருக்கேன் ஆனால் இதை சொல்லும்போது தான் அவர்கள் எழுத ஆரம்பிக்கிறார்கள் அவர்கள்-தேவை இதுதான், என்று மீடியாவை ஒருபிடி பிடித்தார்.
என்னை பொருத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதுதான்-மதச்சார்பின்மை. தீவிரவாதிகளை ஒழிப்பது மதசார்பின்மை என்றார். “if opposition to terrorism would be regarded as communalism. “If I have to pay the price, I am ready”. என்று அதிரவைத்தார்.
தேர்தல் முடிவு-வரும்வரை என்னை பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல்-முடிந்த பின்னர் தற்போது குஜராத்மக்களிடம் என்ன கோளாறு என்ன என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்துவருகின்றன. இவர்களை என்ன என்று சொல்லுவது என்று மீடியா-நண்பர்களைப் பார்த்து கேட்டார்.
என் மீது ஊழல்குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும் போது சோ ராமசாமி- குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப்பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம்-தெரியாது. சட்ட பேரவை எப்படி இருக்கும் என-தெரியாது. ஆனால் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாள் அன்று அகமதாபாத்தில் நடந்தகூட்டதில் சர்தார் வல்லபாய் பட்டேல் என்ற வார்த்தையை காங்கிரஸ் காரர்கள் 20முறை சொல்லியிருப்பார்கள் ஆனால் மோடி என்ற-வார்த்தையை 200முறை சொன்னார்கள். அப்போது என்னிடம் 250ஜோடி உடைகள் இருப்பதாகக் என்று குற்றம்-சாட்டினார்கள். என்னிடம் 205உடைகள் இருந்தன. (அவர்களுக்கு பூஜ்யத்தை- எங்கே போடுவ தென்று தெரியவில்லை.) நான் மக்களிடம் முறையிட்டேன், அவர்களிடம் மன்னிப்பு கேட்டேன்,” என்றார்.
குஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசுமரண விகித அதிகரிப்பை கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்க பட்டுள்ளது. இந்தியாவில் 6லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. அதற்கு 2000மகப்பேறு மருத்துவர்கள் கூட கிடையாது என்பது கசப்பான-உண்மை. குஜராத் மருத்துவர்களிடம் நான் ஒரு MOU போட்டேன். கிராமத்தில் மகப்பேறு மருத்துவம் பார்த்தால் டாக்டருக்கு 2000 ரூபாய். பேஷண்டுக்கு 200+200 கன்வேயன்ஸ் அலவன்ஸ், டெயிலி அலவன்ஸ் 200 என்று கொடுக்கிறேன். அதனால் சிசு-மரணம் கணிசமான அளவு குறைந்துள்ளது. தற்போது குஜராத்தில் 800மகப்பேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்ற தகவலையும் சொன்னார்.
எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும். கவர்மெண்டுக்கும் கவர்னஸுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு என்றார். குஜராத்தில் நடப்பது “minimum Government – maximum Governance”
அமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.
குஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.
எங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.
வளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கும் விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும்.
சுதந்திரம் வருவதற்கு முன் நிறைய பேர் அதற்கு போராடினார்கள், ஆனால் காந்தி அந்த போராட்டத்தை ஒரு மாஸ் இயக்கமாக தோற்றுவித்தார். இந்தியாவிற்கு அது போல ஒரு Development Movement தேவை என்றார்.
மற்றவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் செய்ததை சொல்கிறேன் ஆனால் மற்ற அரசியல் தலைவர்கள் தாங்கள் செய்யப் போவதை சொல்கிறார்கள். (ஆனால் செய்வதில்லை) என்று தன் பேச்சை முடித்தார்.
{qtube vid:=aPaJiFKHRkE}
{qtube vid:=Ktu-p4d0wS8}
{qtube vid:=oOONUoTfRx4}
{qtube vid:=GsmSf2n0hg4}
{qtube vid:=TjDW4DaIZVc}
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.