பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகாலசோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப் பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒருபெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான்.
ஆனால், அது சாதாரனவிஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல.ட்சம் கனநீர்பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல்தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்து செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறு குறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம்கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின்மீது பெரியபெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப்பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம்கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொருபாறையை வைப்பார்கள்.
நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களிமண்ணைப் புதிய பாறைகளில் பூசி விடுவார்கள் . இப்போது இரண்டும் ஒட்டிக் கொள்ளும் . இப்படிப் பாறைகளின்மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரிநீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.
ஆங்கிலப் பொறியாளர் சர் ஆர்தர்காட்டன் தான் இந்த அணையைப் பற்றிப் பல காலம் ஆராய்ச்சிசெய்து இந்த உண்மைகளைக் கண்டறிந்தார் . காலத்தைவென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையைப் பார்த்து வியந்து அதை ' தி கிராண்ட் அணைக்கட் ' என்றார் சர் ஆர்தர்காட்டன் . அதுவே பிறகு உலகமெங்கும் பிரபலமாயிற்று .
உலகிற்கு பறைச்சாற்றுவோம் தமிழனின் பெருமைகளை…. கண்டிப்பாக ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிய வேண்டிய செய்தி….
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.