அடுத்த முறையும் மோடி பிரதமராக வரவேண்டும் என்று கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து

 நரேந்திர மோடிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அடுத்த முறையும் அவர் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்தினர்.

சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் கூறுகையில், “நாட்டின் நாட்குறிப்பில் மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்படும் இந்நாளை பொன்னெழுத்துக்களால் பொறிக்கவேண்டும். சிரோமணி அகாலிதளம், பாரதிய ஜனதாவின் நம்பிக்கைக்குரிய கூட்டணி கட்சி . அடுத்த முறையும் பிரதமராக மோடியை தேர்ந்தெடுப்பதற்கு எங்களின் ஆதரவு என்றும் உண்டு என்று சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் கூறினார்

“பல வருடங்களாகக் கண்டகனவு இன்று நனவாகி இருக்கிறது. பாஜகவின் கூட்டணியில் 25 ஆண்டுகளாக உள்ளோம் . பெரும்பாலான ஆண்டுகள் போராட்ட அரசியலில் மட்டுமே ஈடுபட்டுவந்தோம். எனது தந்தை பால்தாக்கரே இப்போது உயிருடன் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பார். நம் நாட்டிற்கு துவங்கிவிட்ட நல்ல காலத்தின் முதல் நாள் இது. மோடி தொடர்ந்து பிரதமராக இருக்க எங்கள் ஆதரவு என்றும் தொடரும் என்று ” சிவசேனைக் கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான் கூறுகையில், “மோடியை பிரதமராக முன்னிறுத்தியதால், தே.ஜ.,கூட்டணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது ஒன்றும் சாதாரணவெற்றி அல்ல. முட்கள் நிறைந்த கிரீடம் இது. மக்கள் மலர் மாலைகளாக அளித்தாலும் அதை முட்கள் நிறைந்த கிரீடமாக ஏற்று மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். நாட்டின் 84 தனித்தொகுதிகளில் 62-ல் பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. தலித்துகள் பெயரில் அரசியல் நடத்தும் தலைவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டது. அடுத்து வரும் காலங்களிலும் மோடியே பிரதமராக இருக்கவேண்டும் என்று லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பாஸ்வான் கூறினார்

நாகா மக்கள் முன்னணியின் தலைவர் நெய்பியூ ரியோ பேசுகையில், ‘நாடு இனி வடகிழக்குப் பகுதி மக்களின் பிரச்சினைகளை கவனிக்கும் என நம்புகிறேன்” என்று  நாகா மக்கள் முன்னணியின் தலைவர் நெய்பியூ ரியோ கூறினார்

‘இந்திய நாட்டின் சரித்திரத்தில் இப்படி ஒரு வெற்றி யாருக்குமே கிடைத்ததில்லை. காங்கிரஸ் கட்சி குப்பைத்தொட்டியில் துடைத்து எறியப்பட்டுவிட்டது. இந்திராகாந்தி அம்மையார் தோற்றபோதுகூட குறிப்பாக தென் இந்தியாவில் 157 இடங்கள் கிடைத்தன. ஆனால், இப்போது அக்கட்சிக்கு 2 இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...