நரேந்திரமோடி வெற்றிபெற்ற வாரணாசியில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு சதி திட்டமிட்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி வாரணாசி. இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும். இங்குள்ள காசிவிஸ்வநாதர் ஆலயம் பிரசித்திபெற்றது. நாடுமுழுவதும் உள்ள இந்துக்கள் ஒருமுறையாவது இங்கு சென்று வழிபடவேண்டும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தீவிரவாதிகள் வாரணாசியை தாக்க சதி திட்டம் தீட்டி இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. வாரணாசியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு மாநிலஅரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து உ.பி. அரசு வாரணாசியில் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய இடங்களிலும் வழிபாட்டு தலங்களிலும் தீவிரகண்காணிப்பு போடப்பட்டுள்ளது. வாரணாசி தவிர மேலும் மதுரா, அயோத்தி நகரங்களுக்கும் தீவிரவாதிகள் மிரட்டல் இருப்பதால் அங்கும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கும் செயலில் விஷமிகள் ஈடுபடகூடும் என்பதால் மாநில அரசு விழிப்புடன் செயல்படுமாறும் பாதுகாப்பு படையினரை உஷார் படுத்துமாறும் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.