போர்ட் எலிசா (பிரேசில்): இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் (பிரிக்ஸ்) இணைந்து உருவாக்கியுள்ள வங்கிக்கு பிரதமர் நரேந்திரமோடி பரிந்துரை செய்த பிரிக்ஸ் புதிய வளர்ச்சி வங்கி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பிரேசிலில் நடந்த 6வது பிரிக்ஸ் நாடுகள் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, கிட்டத்தட்ட 60000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய வளர்ச்சிவங்கி உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசளவில் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவரும் பொருளாதார சூழ்நிலைகளில் மாற்றம் கொண்டுவரும் வகையில், இந்த புதியவங்கி உருவாக்கப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வளரும் நாடுகளில் உள்க்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்நோக்கில் இந்த வளர்ச்சிவங்கி துவக்கப்பட்டுள்ளது. இந்தவங்கியின் தலைமையகம் சீனாவின் வர்த்தக நகரான ஷாங்காயில் இருந்து செயல்படும். வங்கியின் செயலாக்கம் முதல் 6 ஆண்டுகளுக்கு இந்தியாவின்வசம் இருக்கும். தொடர்ந்து பிரேசில், ரஷ்யா என மற்ற நாடுகள் இதன் செயலாக்கத்தை தலா 5 ஆண்டுகள் கவனிக்கும்.
இது தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திரமோடி, கடந்த 2012ம் ஆண்டு டில்லியில் நடந்த வளர்ச்சிவங்கி துவங்குவது தொடர்பான நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டு, தற்போது வங்கி துவக்கப்பட்டுள்ளது தனக்கு மிகவும்மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்தவங்கிக்கு பிரிக்ஸ் புதிய வளர்ச்சிவங்கி என பெயரிடுமாறு மோடி தெரிவித்த யோசனை ஏற்கப்பட்டு, அதன்படி புதிய வளர்ச்சி வங்கி என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.