பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை

ரஷ்ய அதிபர் மேதகு விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன்.

பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய வளர்ச்சித் திட்டம், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு,  நிலைமைக்குத் தக்கபடி தகவமைத்துக் கொள்ளக்கூடிய  விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கியமான தளமாக இந்த  பிரிக்ஸ் மாநாடு உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன் பிரிக்ஸ் அமைப்பு  விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையால் ஏற்பட்டது ஆகும்.  உலகளாவிய நன்மைக்கான   செயல்திட்டமும்   சேர்க்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் 2024 ஜூலையில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் அடிப்படையில், கசான் நகருக்கான  எனது பயணம் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.

பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்� ...

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஆட்சி: அமித் ஷா பெருமிதம் 'பிரதமராக மோடியின் 11 ஆண்டு ஆட்சி காலம் வரலாற்றில் ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

மருத்துவ செய்திகள்

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...