கடந்த சில நாட்களுக்கு முன்பு, கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 43 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மீனவர்கள், கைதான மீனவர்களை விடுதலை செய்யக்கேட்டும், இதுவரை பிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத விசைப் படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும், கடந்த 24–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகேட்டு விசைப்படகுகளில் வெள்ளை கொடி கட்டினர். அடுத்த கட்டமாக 2–ம் தேதி (இன்று) விசைப் படகுகளுடன் கச்சத்தீவுக்கு சென்று தஞ்சம்புகுவது என்று முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை திட்ட மிட்டபடி மீனவர்களும், அவர்களது குடும்பபெண்களும் போராட்டத்திற்காக திரண்டனர். இதனால் ராமேசுவரத்தில் பதட்ட மான சூழ்நிலை ஏற்பட்டது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத் துரை, துணை சூப்பிரண்டு விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் உள்ள 94 மீனவர்களையும் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள 62 விசைப் படகுகளையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மீனவர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலம் கிளம்பிய சிறிது நேரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். கச்சத் தீவுக்கு தஞ்சம் புகும் போராட்டத்துக்கு அனுமதி கிடையாது. இதற்கு மேலும் ஊர்வலம் சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் மீனவர்கள் தங்கள் போராட்டமுடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் அங்குவந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செல்போன் மூலம் மீனவர்சங்க பிரதிநிதிகளுடன் பேசினார்.
இலங்கை சிறையில்வாடும் மீனவர்களையும், விசைப் படகுகளையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். மேலும் மீனவர் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்குழுவை டெல்லி அழைத்து சென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சந்திக்க ஏற்பாடுசெய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அவரது உறுதிமொழியை ஏற்று மீனவர் சங்கபிரதிநிதிகள் கச்சத் தீவுக்கு தஞ்சம்புகும் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர். இதனால் போலீசாரும் கைது நடவடிக்கையை கைவிட்டனர். தொடர்ந்து மீனவர்கள் கலைந்துசென்றனர். அதேநேரம் தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.