புல்லட் ரயிலை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது

 மும்பை-அகமதாபாத் இடையே செயல்பட்டுவரும் புல்லட் ரயில் சேவையினை தமிழகத்துக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியா குமரியில் இருந்து கேரள மாநிலம் புனலூருக்கு புதிய ரயில் சேவையினை அவர் தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவில் ரயில் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைப் போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து பாதுகாப்பானது என மக்கள் நினைப்பதே இதற்கு காரணமாகும். இந்திய அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் ரயில் பாதைகளில் கன்னியாகுமரி-சென்னை சிறப்பிடம் பெற்று விளங்குகிறது.

1999-ஆம் ஆண்டு வரை கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயங்கி வந்தது. அதன் பின்னர் படிப்படியாக அனந்தபுரி, தில்லி, கொல்கத்தா என ரயில்சேவை விரிவடைந்தது. தற்போது கன்னியா குமரியில் இருந்து காசிக்கு ரயில்விட வேண்டும் என்ற எதிர் பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும், கன்னியா குமரியில் இருந்து கூடங்குளம், திருச்செந்தூர், வேளாங்கண்ணி, நாகூர் வழியாக சென்னை வரையிலான சுற்றுலா மையங்களை இணைக்கும் கிழக்கு ரயில்பாதை திட்டம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. இதற்கான ஆய்வுப்பணிகளை நடத்த மத்திய ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி, நாகர்கோவில் ரயில் நிலையங்களை உலகத்தரத்துக்கு இணையான புதிய ரயில் முனையமாக மாற்றப்படும் என ரயில்வே அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இதன்படி மதுரைவரை வரும் ரயில்கள் அனைத்தையும் கன்னியாகுமரி வரை நீட்டிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முதல் ரயில் நிலையமான ராயபுரத்தை புதியரயில் முனையமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு தேவையான இடவசதி (62 ஏக்கர் நிலம்) அங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடிக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் முக்கிய அம்சம் இந்தியாவில் புல்லட் ரயில் திட்டத்தை விரிவு படுத்துவதாக அமையும். தற்போது மும்பையில் இருந்து அகமதாபாத் வரை செயல்பட்டுவரும் புல்லட்ரயில் திட்டம் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும். இதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றார் அவர்.

கன்னியாகுமரியில் இருந்து நாள்தோறும் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் இந்த பயணிகள் ரயில் நாகர்கோவில், இரணியல், பாறசாலை, நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம், கொட்டாரக்கரா வழியாக இரவு 8.10 மணிக்கு புனலூரை சென்றடையும்.

தொடக்கவிழா நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் சுனில் பாஜ்பாய், விஜய தரணி எம்.எல்.ஏ, நாகர்கோவில் நகர்மன்ற தலைவி மீனாதேவ், முன்னாள் எம்.எல்.ஏ பொன்.விஜயராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...