அம்மாவுக்கு காணும் இடம் எல்லாம் கிலி கொடுத்த பாஜக

 தமிழக உள்ளாட்சி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதின் ஆரம்பமே ஒரு குழப்பம் தான். ஆகஸ்டு 6 ஒரு முறையும் ஆகஸ்டு 28 ஒரு முறையும் அறிவிக்கப்பட்டது ஆனால், இரண்டிலும் செப்டம்பர் 18-தான் தேர்தல்.

கடந்த 15 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்து உள்ளாட்சி தேர்தல்களிலும் சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும், கூட்டுறவு சங்க தேர்தல்களிலும், ஆளுங்கட்சியே தன் அரசாங்க அதிகாரத்தை பயன்படுத்தி மாநில தேர்தல் கமிஷனை "டம்மியாக்கி " வெற்றி பெற்று வந்துள்ளது. இதை ஆரம்பித்து வைத்தது அ.தி.மு.க… தொடர்ந்தது திமுக .

இதில் பங்கு பெற்ற இரண்டு கழகங்களும், எதிர் கட்சியாக இருக்கும் போது "நிற்காமல் ஒதுங்கிக் கொள்ளும்" அளவு ஆளும் கழகம் "உக்கிரமாக" நடந்து வந்துள்ளது* இம்முறையும் ஆளும் அ.தி.மு.க தன் முழு வலிமையை காட்டியது.

எப்போதும் போல, எல்லாக்கட்சிகளும், தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட பெருங்கட்சிகள், உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்வுடன் ஒதுங்கிக் கொண்டன. தேமுதிக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துவிட்டன. இந்நிலையில் "முடிவு எதுவும் அறிவிக்காமல் இருந்த" பாஜக தன் மௌனம் கலைத்து "ஜனநாயகத்தை காப்பாற்ற " தேர்தலில் போட்டி இடப்போவதாக அறிவித்தது.

அதுவரை "சந்தோஷமாக" இருந்த அதிமுக லேசாக "உதர" ஆரம்பித்தது… கண்ணுக்கெட்டிய தூரம் வரை "எதிரிகளையே காணவில்லை" என கொக்கரித்த "ஜெயலலிதா" – பாஜக விலகிக் கொள்ளும் என்றுதான் நினைத்தது.

டெல்லியிலுள்ள பெரும் பெரும் தலைவர்கள் எல்லாம் சென்னை வரும் போது "அம்மாவை" பார்த்துவிட்டு போவதால், "தான் கேட்காமலே" பாஜக போட்டியிடாது" என்கிற முடிவுக்கு "ஜெ" வந்திருக்கலாம்.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் தான் பாஜகவின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டார்கள். "Prevention is better than cure" என்பது ஒரு மருத்துவப் பழமொழி. போட்டியிட அனுமதித்து பாஜகவிடம் தோற்றுப் போவதை விட, பாஜக வேட்பாளர்களை போட்டியிட அனுமதிக்காமல் செய்து விட்டால் ஆரம்பத்திலேயே வெற்றி உறுதியாகிவிடும் என்று அதிமுக கணக்குப் போட்டது.

வேட்புமனு தாக்கல் செய்தவுடன் அதை "நிராகரிப்பது" வேட்பாளர்களை கடத்திச் சென்று "காசு கொடுத்து" விலகல் கடிதம் பெறுவது மிரட்டி அடிபணிய வைப்பது, போன்ற திமுகவும், அதிமுகவும் உருவாக்கிய "புதிய அரசியல் ஜனநாயக நெறிமுறைகளைத் தவிர" இது வரை இவர்களே நினைத்திராத புதிய "யுக்தி" ஒன்றை ஆளும் அதிமுக புதுக்கோட்டை நகராட்சி தலைவருக்கான தேர்தலில் அரங்கேற்றியது.

வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் காலை 10.00 மணிக்கு பாஜக வேட்பாளர் பழ. செல்வம் "வேட்புமனு" வாங்க சென்ற போது அங்கு ஆயிரம் பேர் ஏற்கனவே "வேட்புமனு" பெற வரிசையில் நின்று கொண்டிருந்த அதிசயம், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நேரமாக மாலை 3.00 மணி வரை அந்த வரிசை "நகராமலே நின்று கொண்டிருந்த" வேடிக்கை, எல்லா வகையிலும் முட்டி முட்டி முடிந்தவரை எட்டி குதித்த வேட்பாளர் பழ. செல்வத்தை உள்ளே நுழையாமல் பார்த்துக் கொண்ட ஆளுங்கட்சியினர், இவை அனைத்தையும் வேடிக்கை பார்த்த போலீசும், தேர்தல் அதிகாரிகளும் என ஒரு புதுக்கோட்டை பார்முலாவை அதிமுக இம்முறை அறிமுகப்படுத்தியது.

தேனி நகராட்சி வார்டு உறுப்பினர்தேர்தலில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர், நகராட்சி கடை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார் அதை காலி செய்யச் சொல்லி அவரை மிரட்டியும் வேட்பு மனுவை நிராகரித்த கொடுமைகள் என புதிய புதிய ஜனநாயக பார்முலாக்களை அதிமுக அறிமுகப்படுத்தியது.

தெலுங்கு சினிமா போல அரங்கேறிய இன்னொரு கதைதான் குன்னூர் நகராட்சி சேர்மன் பாஜக வேட்பாளரின் மனு நிராகரிப்பு "அபிடவிட்" என்பது இதுவரை "நோட்டோ பப்ளிக்" இடம் பெற்று சமர்ப்பிக்கப்பட்டு வந்தது. இம்முறை மாநில தேர்தல் கமிஷனை "அபிடவிட்டுகளை" வழங்கியது அதில் தலைப்பு "அபிடவிட்" என்று இருக்கும். உள்ளே ஒரு இடத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு "LOCAL BODY" என்றும் நகராட்சி தேர்தலுக்கு "MUNICIPALITY" என்றும் எழுதியிருக்கும்.

இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே நகராட்சி அபிடவிட்டுகளையும், நகராட்சி தேர்தலில் போட்டியிட விரும்பிய பாஜக வேட்பாளர்களுக்கு வேண்டுமென்றே உள்ளாட்சி அபிடவிட்டுகளையும் மாற்றி தந்து வேட்பு மனு செய்யும் வரை காத்திருந்து நிராகரித்திருக்கிறார்கள். இது மிகமிக சிறிய ஒரு "டெக்னிகல்" Error இப்படி சிறு குறுந்தவறுகளை செய்ய விட்டு "நிராகரிப்புகளை" செய்து அதிகாரிகள் தங்கள் ஆளும் கட்சி விசுவாசத்தை காண்பித்திருக்கிறார்கள்.

ஆக சர்க்காரியா கமிஷன் கூறியது போல திமுக விஞ்ஞான ரிதியாக ஊழல் செய்தது. அதிமுக "டெக்னிகல் ரிதியாக" வேட்புமனுக்களை நிராகரிக்கும் உத்திகளை கையாண்டது இத்தேர்தலில் புதிய அம்சமாகும்.

 இப்படி ஒரு வழியாக பல பாஜக வேட்பாளர்களின் மனுக்களை நிராகரித்த பின்பு ஏற்பட்ட மக்களின் அதிருப்தி ஆளும் கட்சியை அதிர்ச்சி அடைய செய்தது. இதன் முத்தாய்ப்பாக, தோற்றுவிடலாம் என்ற அச்சத்தால் நெல்லை மாநகராட்சி பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் கடத்தப்பட்டு விலை பேசப்பட்டு வாபஸ் வாங்க வைக்கப்பட்டார். இது மக்கள் மத்தியில் அதிமுக மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியது கோவையில் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் பேச்சில் இது வெளிப்பட்டது.

"உட்கட்சி பூசலால் வெள்ளையம்மாள் வாபஸ் வாங்கிக் கொண்டார்" என புதிய  அஸ்திரத்தை "ஜெ" ஏவினார். வாபஸ் வாங்க வைக்கப்பட்டதற்கு இரண்டு நாட்கள் முன்பு வரை இல்லாத உட்கட்சி பூசல் திடீரென எங்கிருந்து முளைத்தது என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநிலத்தலைவர் தமிழிசை அவர்கள் இதுவரை எந்தகட்சியும் நடத்திராக, அதிமுகவே எதிர்பார்க்காத வகையில் ஆளும்கட்சியையும், தேர்தல் கமிஷனையும் தாக்கிய விதம் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்களுக்கு ஒரு புது நம்பிக்கை கொடுத்தது. அதிமுக இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பாராளுமன்ற தேர்தலில் அகில இந்தியாவும் "மோடி அவர்களை ஆதரித்த போது" தமிழகம் மட்டும் தனித்து விடப்பட்டது போல 'ஜெ' வை ஆதரித்து பெரும் ஆச்சரியமாக இருந்தது. மின்வெட்டு சட்டம் ஒழுங்கு சீர் குலைவு, இந்து இயக்க தலைவர் கொல்லப்படுவது தொடர்ந்தது, குற்றவாளிகளை கண்டுபிடிக்காதது, ஊழல் என மக்கள் அதிருப்தியில் "ஊதிப் பெருத்திருந்த" அதிமுக எப்படி வெற்றி பெற்றது என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

அந்தகேள்விக்கு உள்ளாட்சி இடைத்தேர்தலில் விடை தெரிந்துவிட்டது.. கோவையில் 16 அமைச்சர்கள் 3 எம்.பிக்கள், 12 எம்.எல்.ஏக்கள், 22 மாவட்ட செயலாளர்கள் முகாமிட்டு வீடு வீடாக பணப்பட்டுவாடா உள்ளுர் கவுன்சிலர், எம்.எல்.ஏக்கள் போய் மக்களை சந்தித்தால் கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தால் வெளியூரிலிருந்த "ஆட்கள்" வரவழைக்கப்பட்னர்". 50 வாக்காளர்களுக்கு ஒரு மாவட்ட நிர்வாகி என பிரிக்கப்பட்டு 35 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டது. இது தான் பார்லிமெண்ட் தேர்தலும் நடந்தது.

முன்பெல்லாம், வீடு வீடாக, பதுங்கிப் பதுங்கி திருட்டுத்தனமாக இரவு நேரங்களில் தான் இந்த பண பட்டுவாடா நடக்கும். "டோக்கன்" கொடுப்பார்கள். அதை கொண்டு சென்று "குறிப்பிட்ட இடத்தில்" கொடுத்தால் பணம் கொடுப்பார்கள். இந்த இடைத் தேர்தலில் நட்டநடு ரோட்டில், பட்டப்பகலில், வெளிப்படையாக பண வினியோகம் செய்தார்கள் ஆளும் கட்சியினர்.

கோவையில் பாஜகவினர் பல இடங்களில் பணம் கொடுத்தவர்களை கையும் களவுமாக பிடித்து, போலீசிடமும், தேர்தல் ஆணைத்திடமும் ஒப்படைத்தும் எந்த வழக்குமில்லை, உடனடி விடுதலைதான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

இதில் வேடிக்கை என்னவென்றால் "investigation Jurnalisam" செய்யும் தமிழக "கிசு கிசு" பத்திரிக்கைளும், 'டெகல்கா ஆபரேஷன் நடத்திய ஆங்கில பத்திரிக்கை, ஊடகங்களும், வாய்மூடி கைகட்டி "கப்சிப்" என இதை பார்த்துக் கொண்டிருந்தது. எதற்கெடுத்தாலும் கூக்குரல் எழுப்பும் "இடது சாரிகளும்" அவர்கள் அலுவலகத்தின் "வலது ஓரமாக" வாய்மூடி அமைதிகாத்தார்கள். பாஜக மட்டும் அராஜக போர்க்களத்தில் வீரச்சமர் புரிந்தது.

இந்த அராஜகங்களை பார்த்து வெறுத்துப் போன நல்லவர்கள் நடுநிலையாளர்கள், முணு முணுப்பதும் குற்றஞ்சாட்டுவதோடும் சரி, ஓட்டுப் போட வரவில்லை என்பதால் அதிமுக எப்போதும் போல "விலைக்கு வாங்கிய வாக்குகளையும்" அதிகாரிகளையும் பணிய வைத்து ஆளில்லாத போது போட்ட "சிறப்பு வாக்குகளையும்" பதிவு செய்தது.

தேர்தல் முடிவுகள் ஓரிரு இடங்களை தவிர மற்ற இடங்களில் ஆளும் கட்சிக்கு சாதகமாகவே  இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனாலும், எளிதாக வென்றுவிடலாம், எதிரிகளே காணவில்லை என்று எக்காளமிட்ட ஆளும் கட்சியை தமிழக பாஜக "தண்ணி காண்பித்தது" என்பதுதான் இத்தேர்தலின் சிறப்பம்சம்.

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...