ஜெயலலிதா வழக்கு தீர்ப்பை போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனை பெறுவது நிச்சயம் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;
இந்த வழக்கின் ஆரம்ப காலத்திலேயே தகுந்த உண்மையான ஆதாரங்களை முன்வைத்துதான் மனுதாக்கல் செய்திருந்தேன். வழக்கில் நிச்சயமாக வெற்றிபெறுவேன் என்று ஆரம்பத்திலேயே தெரியும். தீர்ப்பு சரியானபடியே வந்துள்ளது. இது நான் எதிர்பார்த் தீர்ப்புதான். ஆனால் கொஞ்சம் தாமதமாக வந்துள்ளது.
இந்த வழக்கைப் பொறுத்த வரை ஆதாரங்களை திரட்டுவது தான் எனக்கு மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவர் என்பதால் இதை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்றதே மிகப்பெரிய போராட்டம் என்று சொல்லலாம். நிறைய பிரஷர்கள், சமரசமுயற்சிகள் எல்லாம் நடந்தன. ஆனாலும், வழக்கை வாபஸ்பெறுவது என்ற நிலைக்கு செல்லவே இல்லை.
உடல் நலத்தை காரணம் காட்டி அவர்கள் மேல் முறையீடு செய்யலாம். இதன்பேரில் 'அவர் சிறையில் இருக்கக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும்' என்று கூட தீர்ப்புகள் வரலாம். ஆனால், மேல்முறையீட்டில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு சாதாரணமாக கிடைத்துவிட கூடாது.
அப்படியில்லை. இந்தியா ஜனநாயக நாடு. தற்போது நாட்டில் ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தத் தீர்ப்பு வந்துள்ளது. தமிழகத்தின் சில இடங்களில் சமூகவிரோதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். வன் முறையில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் தொலைபேசியில் பேசினேன். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறினேன். அரசியலமைப்பு சட்டத்தின் 256-வது ஷரத்தின் கீழ் தமிழக ஆளுநருக்கு உள்துறை அமைச்சர் சில ஆலோசனைகளை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இப்போது தமிழகத்தில் அமைதியான சூழல் உருவாகியுள்ளது.
ஜெயலலிதா வழக்கு தீர்ப்பைப் போலவே 2ஜி வழக்கிலும் ராசா, கனிமொழி உட்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் தண்டனைபெறுவது நிச்சயம். இந்தவழக்கில் ப.சிதம்பரத்தையும் சேர்க்கவேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால், என்னிடம் போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரைசேர்க்க மறுத்தது. வலுவான ஆதரத்தை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்ப முடியாது.என்று சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.
மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது. |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.