மோகன் பாகவத்தின் உரை தூர்தர் ஷனில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது மகிழ்ச்சியை தருகிறது

 ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒருமணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் எதிர்த்துள்ளதை பாஜக வன்மையாக கண்டித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷைனா என்.சி. கூறுகையில், "ஆர்.எஸ்.எஸ். ஒருதேசியவாத இயக்கம். "தேசம் தான் முதலில்' என்பதிலும், எந்த தனி நபரின் நலனை விட தேசம் தான் முக்கியம் என்பதிலும் அது நம்பிக்கை கொண்டுள்ளது. மோகன் பாகவத்தின் உரை தூர்தர் ஷனில் நேரலையாக ஒளிபரப்பப் பட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தேசப்பற்றிலும், நாட்டை கட்டமைப் பதிலும் உண்மையாக பங்களிப்புசெய்யும் இயக்கம் இன்று இருக்குமானால் அது ஆர்எஸ்எஸ் தான் என்று மக்கள் உணர்கின்றனர்' என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பாகவத்தின் உரையை தூர்தர் ஷன் நேரடியாக ஒளிபரப்பியதை எதிர்க் கட்சிகள் விமர்சித்ததற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தொடர்பாக பிரசார்பாரதி அமைப்பு சொந்தமாக முடிவெடுக்கிறது. அப்படி இருக்கும் போது, செய்தி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான ஆர்.எஸ்.எஸ் தலைவரின் உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படுவது ஏன்? இந்த நிகழ்ச்சியை தனியார் தொலைக் காட்சிகளும் ஒளிபரப்பியுள்ளன. எனவே இதை தூர்தர்ஷன் ஏன் காட்டக்கூடாது?

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் உரையை, முந்தயை ஆட்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடு காரணமாக கடந்தகாலங்களில் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களது உரைகளை "தூர்தர்ஷன் செய்தி ' தொலைக் காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. அப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

"இதர செய்திகளைப் போன்றுதான் மோகன் பாகவத் பங்கேற்றசெய்தியும் ஒளிபரப்பப்பட்டது' என்று தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் அர்ச்சனா தத்தா விளக்க மளித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...