1925 விஜயதசமி நாளில் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு, அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. ஆனால், 1948-ல் மகாத்மாகாந்தி படுகொலையில், ஆர்.எஸ்.எஸ். மீது வீண்பழி சுமத்தி, தடை செய்து, பெரும் கொடுமைகளை காங்கிரஸ் அரசு செய்தது. அதன்பிறகுதான், அரசியல் தளத்திலும் அமைப்பு வேண்டும் என, அன்றைய ஆர்எஸ்எஸ். தலைவர், குருஜி கோல்வால்கர் முடிவுசெய்தார்.
நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் நேருவின் தலைமையில் அமைந்த முதல் அமைச்சரவையில், மகாத்மா காந்தியின் பரிந்துரையின் பேரில், இடம்பெற்றவர் சியாம பிரசாத் முகர்ஜி. நேரு அரசின் செயல்பாடுகளை கண்டித்து, அமைச்சர்பதவியிலிருந்து விலகிய அவர், ‘ஜன சங்கம்’ என்ற அரசியல்கட்சியை தொடங்க, குருஜி கோல்வால்கர் ஊக்கமளித்தார். முகர்ஜிக்கு துணையாக, ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியர் பண்டிட் தீன்தயாள் உபாத்தியாயாவை குருஜி அனுப்பினார். பின்னர், ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களாக இருந்த வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோரையும் ஜனசங்கத்திற்கு அனுப்பினார்.
இவர்களின் கடும் உழைப்பாலும், சியாம பிரசாத் முகர்ஜி, தீன்தயாள் உபாத்தியாயாவின் உயிர் தியாகத்தாலும், இந்திய அரசியல்களத்தில் காங்கிரஸுக்கு மாற்றாக, ‘ஜன சங்கம்’ வளர்ந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் போராடிபெற்ற ஜனநாயகத்தை முடக்கி, நாட்டில் நெருக்கடி நிலையை, 1975-ல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி பிரகடனப்படுத்தினார். நெருக்கடிகால கொடுமையை கண்டித்து ஆர்.எஸ்ஸும், ஜனசங்கமும் தீரத்துடன் போராடின. ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீரமான, தியாக போராட்டத்தைக் கண்டுவியந்த, ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸை ஆதரிக்கத் தொடங்கினர்.
அனைத்து வேற்றுமைகளையும் மறந்து, எதிர்க் கட்சிகள் அனைத்தும், இந்திரா காந்தியின் கொடுங் கோலாட்சியை வீழ்த்த, ‘ஜனதா கட்சி’ என்ற பெயரில் ஒன்றிணைந்தன. ‘ஜன சங்கம்’ கலைக்கப் பட்டு, ஜனதா கட்சியில் இணைந்தது. 1977 பொதுத்தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்றது. முதல்முதலாக இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு அமைந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமரானார். வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகினர்.
இரண்டரை ஆண்டுகள் நீடித்த ஜனதாஆட்சி, குழப்பத்தால் வீழ்ந்தது. ஜனதா கட்சியில் நீடிக்க வேண்டுமானால் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருக்கக்கூடாது என்று, சிலர், நிபந்தனை விதித்தனர். ஆர்.எஸ்.எஸ்.ஸா? ஜனதா கட்சியா? என்றநிலை வந்தபோது, ஆர்.எஸ்.எஸ். தான் முக்கியம் என்று வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட ஜனசங்க தலைவர்கள், ஜனதா கட்சியில் இருந்து வெளியேறினார்.
ஜனதா கட்சியில் இருந்து வெளியேறியபிறகு, 1980 ஏப்ரல் 6-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. மும்பையில் நடைபெற்ற அதன்தொடக்க விழாவில் பாஜகவின் முதல் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் பொறுப்பேற்றார். இதுதான் பாஜக என்ற அரசியல் கட்சி பிறந்த வரலாறு.
பாஜக தொடக்கவிழாவில் பேசிய வாஜ்பாய், “தனி நபரை விட, கட்சி முக்கியம். கட்சியை விட தேசம் முக்கியம் (Nation first, Party next, Self last)” என்று முழங்கினார். வாஜ்பை காட்டிய அந்தப் பாதையில் தான் பாஜக இன்றும் பயணிக்கிறது பாஜகவினருக்கு தங்களது சொந்த நலன்களைவிட கட்சி நலனே முக்கியம். கட்சியை விட தேசியமே முக்கியம்.
கட்சி தொடங்கப்பட்ட பிறகு 1984 மக்களவை பொதுத்தேர்தலை பாஜக முதன் முதலாக எதிர்கொண்டது. ஆனால் இந்திராகாந்தி படுகொலையால் நாடுமுழுவதும் ஏற்பட்ட அனுதாப அலையால் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெற்றது. பாஜகவுக்கு இரண்டேஇடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக இனி அவ்வளவுதான் என்று எதிரிகள் நினைத்தனர்.
ஆனால், சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்தது போல, பாஜக உயிர்த்தெழுந்தது. 1989-ல் 85, 1991-ல் 110, 1996-ல் 187 இடங்களில் பாஜக வென்று தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது. அதனால் பாஜகவை ஆட்சி அமைக்க, அன்றைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைத்தார். முதல் முறையாக வாஜ்பாய் பிரதமரானார்.
1998-ல் வாஜ்பாய் தலைமையில் அமைந்த கூட்டணி அரசு 13 மாதங்களில் கவிழ்க்கப் பட்டது. 1999 தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி வென்றது. வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். 20-க்கும் அதிகமான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வெற்றிகரமாக கூட்டணிஅரசை வழிநடத்தினார் வாஜ்பாய். அவரது ஆட்சிக் காலம் ஒருபொற்காலம் என்று எதிர்க்கட்சிகள் இன்று ஒப்பு கொள்கின்றனர். தங்கநாற்கரச் சாலை திட்டத்தின் மூலம், தேசத்தை நெடுஞ்சாலைகள் மூலம் இணைத்து நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டவர் வாஜ்பாய்.
2004 முதல் 2014 வரை, 10 ஆண்டுகள் பாஜகவால் ஆட்சியைபிடிக்க முடியாவிட்டாலும், 2014 பொதுத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்தது. குஜராத் முதல்வராக 13 ஆண்டு காலம் வெற்றிகரமாக ஆட்சி நடத்திய திரு. நரேந்திர மோடி மக்களின் பேராதரவுடன் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். 2019 பொதுத் தேர்தலிலும் நரேந்திர மோடிக்கு மக்கள் பெரும் ஆதரவு அளித்தனர். 303 இடங்களில்வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைத்தது. தொடர்ந்து இரண்டு தேர்தல்களிலும், எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
1984-ல் பாஜகவுக்கு இரண்டே இரண்டு எம்பிக்கள் இருந்தபோது, எதிர்க்கட்சிகள் கேலி செய்தனர். ஆனால், இப்போது நாட்டையே பாஜக ஆள்கிறது. மக்களவையில் மட்டுமல்ல மாநிலங்களவையிலும் பாஜக சாதனை படைத்துள்ளது. மாநிலங்களவையில் முதல் முதலாக 100 இடங்களை தாண்டி 101 எம்பிக்களை பாஜக பெற்றுள்ளது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலங்களவையில், ஒரு கட்சி, 100-ஐ தாண்டியிருப்பது பாஜக தான். இன்று பாஜகவின் 42வது அமைப்பு தினம். இந்த நாளை நாடாளுமன்ற மாநிலங்களவையில் சதமடித்து கொண்டாடி இருக்கிறது. பாஜகவின் இந்த வெற்றிக்கும், கட்சியை கட்டுக்கோப்புடன் வழி நடத்திச் செல்வதற்கும், தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்ற கொள்கையும், Nation first, party next, self last என்ற வாஜ்பாயின் கொள்கை முழக்கமும் தான் காரணம். அவர்கள் காட்டிய கொள்கை பாதையில் என்றும் பயணிக்க இந்நாளில் உறுதி ஏற்போம்.
நன்றி வானதி சீனிவாசன்
தேசிய மகளீர் அணி தலைவர்
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |