ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறி அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. ஆனால் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று பாஜக தேசிய குழு உறுப்பினரும் முன்னணி தலைவருமான இல.கணேசன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது ; ரஜினி ஒரு தேசியவாதி. பாஜக மூத்த தலைவர்களிடம் அவர் நல்ல மரியாதை கொண்டிருக்கிறார். ரஜினி காந்த் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறி அவரை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த முயற்சி நடக்கிறது. அவர் அரசியலுக்கு வருவதாக இல்லை. இதைபெரிதுபடுத்த வேண்டாம் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது: இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திரமோடி இருவகைகளில் தனித்தன்மை பெற்றவராக இருக்கிறார். உலக நாடுகளிடையே இந்தியாவின் மரியாதையை மீட்டுத்தந்துள்ளார். அடுத்ததாக, மக்களுக்கு நேரடியாக கருத்துகளை தெரிவிக்கக் கூடியவராக இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை பொறுத்த வரை குற்றம் சாட்டப்பட்டவர் யார் என்று பார்த்து தீர்ப்பு வழங்க வில்லை. குற்றத்தின் தன்மையைப் பார்த்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா தன்னை நிரபராதி என்று நிரூபிக்க 18 ஆண்டுகள் வாய்ப்பு வழங்கப் பட்டது. தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை ஊழலுக்கு எதிரான தண்டனை. 18 ஆண்டுகள் இந்தவழக்கு நீடித்ததால் குற்றத்தின் தன்மை தற்போதைய சமுதாயத்துக்கு மறந்து விட்டது. இதில் மேல் முறையீடு செய்து அவர் தீர்வைபெறலாம். இந்த தீர்ப்பை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் நடத்திய தொடர் போராட்டங்களால், ஜெயலலிதா கைதான போது இருந்த அனுதாபம் முற்றிலுமாக போய்விட்டது.என்றார்
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.