ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் 'ஹுத்ஹுத்'புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று பார்வையிட்டார். அப்போது ஆந்திராவுக்கு உடனடி நிவாரண தொகையாக ரூ.1000 கோடி வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
கடலோர ஆந்திரா, ஒடிஸா மாநிலங்களில் சில மாவட்டங்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை 'ஹுத்ஹுத்' புயல் பெரும் சேதத்தை உண்டாக்கியது. குறிப்பாக விசாகப்பட்டினம், விஜய நகரம், ஆகிய கடலோர மாவட்டங்கள் பெரும் பதிப்புக்குள்ளாகின . புயல் கரையைக்கடந்து 3 நாட்களான பின்னரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பவில்லை. கடலோர ஆந்திராவில் தொடர்ந்து சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் 1.05 மணிக்கு டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, 1.35 மணிக்கு விசாகப் பட்டினத்துக்கு வந்தார். வழியில் புயல்சேதத்தை பார்வையிட்டார். விமான நிலையத்தில் அவரை மாநில ஆளுநர் நரசிம்மன், முதல்வர் சந்திரபாபுநாயுடு, மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, கஜபதிராஜு மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் புயலால் சீர்குலைந்துள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்தை பார்வையிட்டார். பிறகு காரில் விசாகப்பட்டினம் பீச்ரோடு, துறைமுகம், எம்.வி. பி. காலனி உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஒரேகாரில் சென்று பார்வையிட்டார்.
அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் புயல் சீரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த புயல்பாதிப்பு புகைப்படங்களை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது:
ஹுத்ஹுத் புயல் ஆந்திராவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல்தொழில் நுட்பத்தை ஆந்திர அரசு நன்றாக உபயோகப்படுத்தி கொண்டுள்ளது. இந்தபுயல் தாக்கத்தை சமாளித்ததில் மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை முக்கிய காரணமாகும். அரசு கேட்டு கொண்டதற்கு இணங்க விசாகப்பட்டின மக்களும் வெளியேவராமல் சாமர்த்தியமாக செயல்பட்டனர். அவர்களை பாராட்டுகிறேன்.
உரியசமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்து விட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகியபகுதிகளை ஆய்வுசெய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
உரியசமயத்தில் மாநில, மத்திய அரசுகள் தகவல்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் உயிர் சேதங்களை நாங்கள் பெருமளவில் தடுத்து விட்டோம் என கூறலாம். ஆனால் புயல் என்பது பயங்கரமானது. இதனை நீங்கள் (பொது மக்கள்) தைரியமாக எதிர்கொண்டீர்கள். உங்களுக்கு என் சல்யூட். கடலோர ஆந்திரா, ஒடிஸா ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தேன். இந்த தருணத்தில் மத்திய அரசு உங்களுக்கு முதுகெலும்பாக செயல்படும். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்.
துறை முகங்கள், விமான நிலையங்கள்,தேசிய நெடுஞ் சாலைகள், கடலோர பகுதிகள், ரயில் வழித்தடங்கள் ஆகியவற்றின் சேதங்கள் குறித்தும், விவசாயசேதங்கள் குறித்தும் விரைவில் கணக்கெடுப்பு நடத்தி அதற்கு தேவையான நிதி உதவிகள் உடனுக்குடன் செய்யப் படும். தற்போது ஆந்திர மாநிலத்துக்கு உடனடி நிவாரண நிதியின்கீழ் ரூ.1,000 கோடி வழங்கப்படும். மேலும் புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரதமர்நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த வர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பின்னர் தனிவிமானம் மூலம் மாலையில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.