அதிவிரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்

 மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறை வைக்கப்பட்டு வருவதும் அவர்களின் படகுகள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் இருப்பது குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர்

சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினேன். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரினேன்.

ஏற்கனவே தான் இது குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகளை அவர் விளக்கினார். உடனடியாக மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.

மேலும் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பிரதமர் நரேந்திர மோடி முயற்சியாலும், வெளியுறவுத்துறை அமைச்சர் முயற்சியாலும் உடனடியாக இது நடக்கும் என்று நம்புகிறேன்.

தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நீண்ட கால தீர்வு திட்டத்தை வகுத்து வருவதாக தெரிவித்தார்கள். ஆழ் கடலில் மீன்பிடித்தல் மற்றும் மீன் உற்பத்தியை பெருக்கவும் மின் பிடிப்புக்குரிய புதிய தேவைகளை உணர்ந்து பல கோணங்களில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்பதனை தெரிவித்தார்.

நிரந்தர தீர்வு ஏற்படும் வரை இடைக்கால தீர்வுக்கு நமது அரசு முயல வேண்டும் என்ற கோரிக்கையை நான் முன்வைத்தபோது, அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார். எனவே அதிவிரைவில் மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என நம்புகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

மருத்துவ செய்திகள்

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...