நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

 மேற்கு வாங்க மாநிலத்தில் ஜமாத் – இ-இஸ்லாமிய அமைப்பினர் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரின் முழு ஆதரவுடன் செயல்பட்டு தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகம் எழுகிறது. சிறுபான்மையினரின் வாக்குகளை பெற வேண்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அதை கண்டும் கானாதவாரகவே நடந்து கொள்வதாக தெரிகிறது.

மம்தா பாணர்ஜி தலைமையில் ஆட்சியில் உள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சி, ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் சதரர் சிபிர் என்ற இயக்கத்தினருக்கு அடைக்கலம் கொடுப்பதாக மத்திய உள்துறை செய்தி தெரிவிக்கிறது. இதன் காரணமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல உறுப்பினர்கள் விசாரணை வளையத்தில் உள்ளர்கள். இவர்களில் தற்போது நடந்துள்ள ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிட்ட அகமது ஹசன் இம்ரான் ஒருவர். இவர் ஜமாத்-இ-இஸ்லாமியவின் பத்திரிக்கையான நயா திகனாடாவின் நிருபர் எனபது குறிப்பிட தாக்கது. மேலும் மேற்கு வங்க மாநில சிமி இயக்கத்தின் தலைவருமாவார். 2013-ல் 24 பர்கானவில் நடந்த வகுப்பு கலவரத்தை தூண்டி விட்டவர் அகமது உசைன் இம்ரான் என்பவர். இது பற்றி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருக்கு மாவட்ட உளவுத் துரையினர் கொடுத்துள்ள அறிக்கையில் இம்ரானின் பங்கு பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். இவர் மீது போடப்பட்ட வழக்கு விசாரணையில் உள்ளது என்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.

இளைஞர்களை மூளைச் சலவை செய்து கலவரப் பகுதிக்கு அனுப்புவதும், அவ்வாறு செல்லும் இளைஞர்கள் வசம் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் கொடுத்து அனுப்புவதும் இம்ரானின் பணியாகும். இவ்வளவு விசயங்களை முதல்வர் மம்தாவிற்கு தெரியப்படுத்தியும், முதல்வர் 2014 பிப்ரவரி மாதம் மேற்கு வங்கத்தில் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் அகமது ஹசன் இம்ரான் என்பவனை வேட்பாளராக்கிவுள்ளார் மேற்கு வங்க இடது சாரி கட்சியின் தலைவரான பீமன் போஸ் எழுப்பிய குற்றச்சாட்டு மேற்கு வாங்க மாநிளைத்தில் உள்ள சைத்க்கீரா பகுதியில் பங்களாதேஷ் காவல் துறையினர் தீவிரவாதிகளை தேடும் போது , அவர்கள் திரினாமுல் காங்கிரஸ் கட்சியன் பஷிரத் பாராளுமன்ற உறுப்பினர் இல்லத்தில் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள் என்றார்.

சில மாதங்களுக்கு முன் பங்களாதேஷ் நாட்டின் அவாமி லீக் கட்சின் உறுப்பினரான ஷேக் பைசல் கரீம் என்பவர் பங்களாதேஷ், நாடாளுமன்றத்தில் இது பற்றிய கேள்வியை எழுப்பினார். இதன் காராணமாக மேற்கு வாங்க முதல்வருக்கு பங்களாதேஷ் நாட்டின் சார்பாக எழுதிய கடிததத்தில், மேற்கு வந்கத்த்தில் பாதுகாப்பாக இருக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினரை கைது செய்து உடனடியாக எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரியுள்ளார்கள் இவரின் கோரிக்கையை போலவே பங்களாதேஷ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் அபுல் ஹசன் முகமது அலி இந்திய அராசாங்கத்திடம் வைத்துள்ள கோரிக்கை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், பங்கலாதேஷ் நாட்டில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இ-இஸ்லாமிக்கு கோடிக்கணக்கில் நிதி அளித்து வருகிறார்கள், உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

சாரதா சிட் பண்ட் மோசடியில் சம்பந்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் என்பது உலகறிந்த விஷயம். இந்த மோசடியில் கிடைத்த பணத்தை பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் டேப்பாசீட் செய்து இருப்பதாக புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். பங்களாதேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் 60 கோடி ரூபாய் டேப்பாசீட் செய்திருப்பதாகவும் இந்த வங்கிக்கும் ஜமாத்-இ-இ-இஸ்லாமி என்ற பயங்கரவாத அமைப்பிற்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மோசடியில் ஈடுபட்டு கொள்ளையடித்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் தாங்கள் கொள்ளையடித்த பணம் ரூ.750 கோடியை மேற்கு ஆசிய நாடுகளிலும், பங்களாதேஷ் நாட்டிலும் முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிதி ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கு கொடுப்பதற்காகவே இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிந்தது. சாரதா சிட்பண்ட நிறுவனத்தின் தலைவர் சுதீப்தோ சென் அதிகாரிகளிடம் தெரிவித்த போது, பங்களாதேஷ் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் சொத்துகள் வாங்குவதற்கு ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பினர் உதவி செய்தார்கள். இந்த உதவிக்கு அவர்களுக்குரிய கமிஷன் கொடுக்கபட்டது என தெரிவித்தார். ஏற்கனவே தனக்கும் ஜமாத்-இ-இஸ்லாமிய அமைப்பிற்கும் தொடர்பு தெரிந்து தான் தனக்கு ராஜ்ய சபா சீட் வழங்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

2002-ல் கொல்கத்தாவில் உள்ள அமேரிகன் சென்டர் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளி அம்மர் ரிஷாக் கான் கொல்கத்தாவை சார்ந்தவன். பங்கலாதேஸ் நாட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளியான ஷாகித் உசேன் ஜூலை மாதம் கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டான், இவன் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ல் வாரணாசில் நடந்த குண்டு வெடிப்பிற்கும், 2010-ல் பூனாவில் ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் அமோனியம் நைட்ரேட் என்ற ஐ-ஈ-டி. வெடி பொருள் கொல்கத்தாவில் உள்ள பூரா பஜாரிலிருந்து கொண்டு செல்லப்பட்டது.

சில தினங்களுக்கு முன் மேற்கு வாங்க மாநிலம் பர்த்வான் நகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்தது. அதாவது அந்த வீட்டில் வெடிகுண்டு தயாரித்த போது வெடித்ததால் இருவர் பலியானார்கள்- பலியானவர்களில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டை சார்ந்தவர். கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்ற சந்தேகம் ஏற்படுவதாக மத்திய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்தார்கள். இது சம்மந்தமாக கைது செய்யப்பட்டவர்கள் ஆறு நபர்கள், இதில் இருவர் பெண்கள். ஏற்கனவே மேற்கு வாங்க எல்லை பகுதியில் பெண்கள் மூலமாக ஆயுதங்கள் கல்ல நோட்டுகள் கடத்தபடுவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

குண்டு வெடிப்பு நடந்த வீட்டில் எதற்காக குண்டு தயாரிக்கப்பட்டது என்பது பற்றி காவல் துறையினர் சோதனை செய்யாமல் சீல் வைத்தனர். ஆனால் மீண்டும் அந்த வீட்டை தேசிய புலனாய்வு அமைப்பினர் திறந்து சோதனை நடத்திய போது 16 கையெறி குண்டுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை மாநில காவல் துறையினர் முறையாக விசாரிக்க வில்லை என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதை போலவே மால்டா மாவட்டத்தில் 70 வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகவே இவ்வாறு வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கும் போது, இது தீவிரவாதிகளின் செயலாகவே பார்க்கபடுகிறது.

ஆகவே நாட்டின் எல்லை பகுதி மாநிலங்களில் ஆளும் கட்சிகள், பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் ஆதரவான சூழ்நிலையில் இருப்பதால, நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகிறது. தங்களின் சுயநலத்திற்காக நாட்டின் பாதுகாப்பை அடமானம் வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...