எல்லையை அயராது பாதுகாக்கும் கடமை தவறா வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லை பாதுகாப்புப்படை உருவானதன் 49-வது எழுச்சி தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துசெய்தியில், "நமது எல்லை பாதுகாப்புப்படை எழுச்சி தினத்தன்று நான் நமது வீரர்களை வணங்குகிறேன்.
நம்மை அமைதியாக வாழசெய்ய அவர்கள் எல்லையில் கடுமையான பணியை மேற்கொள் கின்றனர். அவர்களது அயராத உழைப்பும் பண்பும் அவர்களை எப்போதும் உயர்ந்த இடத்தில் வைத்துபார்க்கவும், நம்மை ஊக்குவிப்பதாகவும் உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லை பாதுகாப்புப்படை கடந்த 1965 டிசம்பர் மாதம் 1-ம் எழுச்சிபெற்றது. அன்று முதல் இரவு, பகல் மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொள்ளாமல் வீர்ர்கள் நமது எல்லையை பாதுகாத்துவருகின்றனர்.
இந்திய எல்லையை எப்போதும் அமைதியான நிலையில் இருக்கசெய்யவும் நாடுகடந்த குற்றங்களை தடுத்த நிறுத்தவும் உலகின் மிகப்பெரிய எல்லை பாதுகாப்புப் படை பாடுபடுவதாக தெரிவித்துள்ளார்.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.