‘நீதித்துறையின் பணியை, எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன’ என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் தெரிவித்த கருத்துக்கு, முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதிலளிக்கையில், ‘நாடாளுமன்றத்திலோ அல்லது மாநில சட்டமன்றத்திலோ எதிர்க் கட்சியின் பங்கை நீதித்துறை நிறைவேற்றும் என்று மக்கள் கருதக் கூடாது’ என்று கூறினார்.
முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த பேட்டியில், “ எதிர்க்கட்சிகளுக்கு ஜனநாயகத்தில் தனிஇடம் உள்ளது. எதிர்க்கட்சி தலைவருடன் நான் இப்பிரச்சினையில் உடன்டவில்லை, ஏனென்றால் நாங்கள் இங்கு பேசுவது இதுவல்ல. ஆனால் நான் சொல்லவிரும்புவது இதுதான், நீதித்துறை எதிர்க் கட்சிகளின் பணியை செய்ய வேண்டும் என்று மக்கள் கருதக்கூடாது. நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ எதிர்க்கட்சியின் பங்கை நீதித்துறை வகிக்க வேண்டும் என்ற தவறான கருத்து உள்ளது ” என்றார்.
மேலும், “நிர்வாக நடவடிக்கை சட்டத்திற்கு இசைவானதா, அது அரசியலமைப்புக்கு இசைவானதா என்பதை ஆராயும்கடமை எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிர்க்கட்சிக்கு ஜனநாயகத்தில் வேறுஇடம் உள்ளது. எதிர்க்கட்சிகளின் தோள்களில் இருந்து மாற்றி, நீதிமன்றத்தை அரசியல் எதிர்ப்பிற்கான இடமாக மாற்றமுயற்சிக்கிறார்கள்”என்றார்
பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்துகொண்ட பிறகு எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த அவர், இது தனித்துவமானது அல்ல என்றும், இதற்கு முன்பும் பிரதமர்கள் சமூக நிகழ்வுகளில் நீதிபதிகளின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும் கூறினார்.
நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |