புதுவையில் பாரதி அணிவித்த பூணூல் சாதியத்துக்கு ஒரு சுருக்கு!

 புதுவை இளைஞன் கனகலிங்கம் “ப்ரோக்ரஷ்ஷிவ் யூனியன் கிரிக்கெட் கிளப்”பில் நிர்வாக உறுப்பினர். 1921ல் அதன் ஆண்டு விழாவிற்கு யாரை அழைப்பது என்று உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்தபோது – பாரதியாரை அழைக்கலாம் என்று முடிவாகியது. பாரதியார் இந்த ஆண்டு விழாவில் ‘ஜாதி பேதங்கள்’ என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சி மூலம் கனகலிங்கம் பாரதிக்கு இன்னும் நெருங்கி வந்தார். இதனிடையே ஒரு

நாள் பாரதி கனகளிங்கத்திடம் “பாண்டியா! உனக்கு நான் பூணூல் அணிவித்து காயத்ரி மந்திர உபதேசம் செய்ய விரும்புகிறேன்” என்றார். “நாளைக் காலை உனக்கு யக்ஞோபவீத தாரணம் செய்ய முடிவு செய்துள்ளேன். காலையில் குளித்து மடி வஷ்த்ரம் அணிந்து – மேல் சட்டை இல்லாமல் வந்து சேர்.” கர்ஜனைக் குரலில் கட்டளை பிறந்தது.

மறுநாள் காலை பாரதியின் வீட்டிற்குள் பாரதி கட்டளையிட்டிருந்த தோற்றப் பொலிவில் கல்லூரி மாணவன் கனகலிங்கம் நுழைந்தான்.

வ.வே.சு.ஐயர், ஸ்ரீநிவாஷாச்சாரியார், நாகஷ்வாமி ஐயர், குவளைக் கண்ணன், கோவிந்தராஜூலு நாயுடு ஆகியோரும் அங்கு இருந்தனர்.

லக்ஷ்மி, சரஸ்வதி, கிருஷ்ணர் ஆகிய தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. படங்களுக்குப் புஷ்பங்களைச் சாத்தினார் பாரதி. கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கத்திக்கும் குங்குமப் பொட்டு இட்டார்.

தேவி ஸ்துதி ஒன்றைப் பாடிய பாரதி கனகலிங்கதைக் கிழக்கு நோக்கி அமரும்படி கூறினார். கனகலிங்கம் குந்திட்டு உட்கார, பாரதி தனது கரங்களில் பூணூலை எடுத்துக் கொண்டு சூரியனை தியானித்தார். சில வினாடிகள் கழிந்தன. பின் கனகலிங்கத்திற்குத் தன்  கையாலேயே பூணூலை அணிவித்தார் பாரதி.

“இன்று முதல் நீ ஒரு பிராம்மணன். யாராவது உனது ஜாதி என்னவென்று கேட்டால் சற்றும் பயமில்லாமல் ‘நான் ஒரு பிராம்மணன்’ என்று சொல்!என? பறையன் பிராம்மணன் ஆவதா என்று யாராவது புருவங்களை உயர்த்தினால், எனக்கு இதெல்லாம் தெரியாது. அவர் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பார்.” இப்படிச் சொல்லும்படி பாரதி கட்டளையிட்டார்.

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...