சமீபத்தில் 475 உறுப்பினர்களை கொண்ட ஜப்பான் பாராளுமன்ற கீழ்சபைக்கு தேர்தல் நடந்தது. இதில் சின்சோ அபே தலைமையிலான விடுதலை ஜனநாயக கட்சி கூட்டணியும், பிரதான எதிர்கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சி கூட்டணியும் அதிகாரத்தை கைப்பற்றப் போட்டியிட்டன.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மூன்றில் இரண்டுபகுதி தொகுதிகளைக் கைப்பற்றி சின்சோ அபே தலைமை யிலான விடுதலை ஜனநாயக கட்சி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2வது முறையாக பிரதமர் பொறுப்பேற்கும் சின்சோ அபே 2018ம் ஆண்டுவரை தொடர்ந்து பிரதமராக நீடிப்பார்.
இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்ற அபேக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் "தேர்தலில் நீங்கள் அடைந்தவெற்றிக்கு வாழ்த்துக்கள், தகுதிவாய்ந்த உங்கள் தலைமையில் ஜப்பான் வளர்ச் சியின் புதிய உயரங்களை அடையும்" என மோடி தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.