இன்று (யுகாதி) ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நிறுவனர் டாக்டர் கேசவபலிராம் ஹெட்கேவர் அவர்களின் 133-வது பிறந்ததினம். 1889 ஏப்ரல் 1-ம் தேதி யுகாதி நாளில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்பிறந்தார் டாக்டர் ஹெட்கேவார். இன்று ‘கொரோனாபோல அன்றைய, காலகட்டத்தில் ஆட்டிப்படைத்த ‘பிளேக்’ நோய்க்கு தனதுதாய், தந்தையை இளம் வயதிலேயே இழந்தார். வறுமையான சூழ்நிலையிலும், கொல்கத்தாவில் மருத்துவம்படிக்கும் அளவுக்கு படிப்பில் சிறந்து விளங்கினார்.
கொல்கத்தாவில் மருத்துவம் படிக்கும் போதே நாட்டின் விடுதலைக்காக இயங்கிய, புரட்சிகர இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டார். அதனால், படிப்பைமுடித்ததும் டாக்டர் தொழிலில் ஈடுபடாமல், காங்கிரஸ் கட்சியில் இணைந்து, விடுதலை போராட்டத்தில் பங்கெடுத்தார். 1920-ம் ஆண்டு நாக்பூரில் நடை பெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தொண்டர் படையின் துணைத்தலைவராக அவர் பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதா? ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் யாராவது விடுதலை போராட்டத்தில் பங்கெடுத் துள்ளார்களா? என்ற கேள்வி திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இடதுசாரிகளும் விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எந்தப்பங்கும் இல்லை என்று ஒரு பொய்யை திரும்பதிரும்ப சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் பிறந்ததே விடுதலைப் போராட்டத்தில் தான்.
குடும்பத்தைக் காக்க டாக்டர் பணிக்கு சென்றே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தும், சொந்த வாழ்க்கையை துறந்து, காங்கிரசில் இணைந்து, விடுதலைக்காகப் போராடியவர் டாக்டர் ஹெட்கேவார். காங்கிரசில் இருந்தபோது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததால் ஓராண்டு சிறையிலடைக்கப் பட்டார்.
சிறையில் இருந்தபோது டாக்டர் ஹெட்கேவாரின் மனதில் பல்வேறுகேள்விகள் எழுந்தன. இத்தனை கோடி மக்கள் கொண்ட, இவ்வளவு பெரியநாட்டை, ஒரு சிறு நாட்டிலிருந்து வியாபாரம் செய்யவந்த, சிறு கூட்டம் எப்படி ஆட்சி செய்கிறது? அதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினார். ஜாதி, மொழி என பலவகைகளில் மக்கள் பிரிந்து கிடக்கின்றனர். தாங்கள் யார்? இந்தநாடு எத்தகைய சிறப்பு மிக்கது என்பதை மக்கள் உணரவில்லை. இதைமக்களுக்கு உணர்த்தாமல், விடுதலை கிடைத்தாலும் பலனில்லை. பிரிட்டிஷாருக்கு பதில், நாளை வேறொருநாட்டவர் நம்மை அடிமைப்படுத்தி ஆள நேரிடும். எனவே தேசியநலனை முன்னிறுத்தி, மக்களுக்கு பயிற்சிஅளிக்க ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் என முடிவு செய்தார்.
சிறையிலிருந்து வெளியேவந்ததும் 1925 விஜயதசமி நாளில் அவர் தொடங்கிய இயக்கம்தான், இன்று உலகமே வியக்கும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தொடங்கும்போது டாக்டர் ஹெட்கேவாருக்கு வயது 35. 1950-ல் அதாவது, தனது 50-வது வயதில் அவர் காலமானார். ஆர்.எஸ்.எஸ்ஸை தொடங்கி பிறகு 15 ஆண்டுகள்மட்டுமே அவரால் உயிர் வாழமுடிந்தது. அந்த 15 ஆண்டுகளுக்குள் அவர் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸை கொண்டு சேர்த்துவிட்டார். அதற்கு அவர் ஒரு யுக்தியைக் கையாண்டார். பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்குபயிற்சி அளித்து, கல்லூரிப் படிப்புக்காக நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பினார். அந்த மாணவர்களின் நோக்கம், கல்லூரியில்படிப்பது மட்டுமல்ல, அங்கு ஆர்.எஸ்.எஸின் கிளையான ‘ஷாகா’வை தொடங்குவதுதான். அப்படி அவர் அனுப்பிய மாணவர்கள் யாரும் சோடைபோகவில்லை. அத்தனை பேரும் சாதித்தார்கள். அவர்கள் இட்ட அடித்தளத்தில்தான் இன்று பா.ஜ.க. எழுந்து நிற்கிறது நாட்டையே ஆள்கிறது. அப்படி தமிழகத்துக்கு அனுப்பப்பட்டவர் திரு. தாதாராவ் பரமார்த். மராத்தியும் கொஞ்சம் இந்தியும் தெரிந்தவர், தமிழகத்தில் பல ஆண்டுகள் தங்கி ஆர்.எஸ்.எஸ்.ஸை தொடங்கினார்.
உலகம் எத்தனையோ தலைவர்களை கண்டுள்ளது. அவர்களில் வெகு சிலர்தான் வரலாற்றில் நிலைத்து நிற்கிறார்கள். அப்படிவரலாற்றில் நிலைத்து நிற்கும், என்றும் நிலைத்து நிற்கப்போகும் தலைவர்தான் டாக்டர் ஹெட்கேவார். இன்று டாக்டர் ஹெட்கேவாரை அறியாதவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்தொடங்கிய இயக்கத்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஒருதலைவரின் சிறப்பு என்பது அவரது பணிகள் மட்டுமல்ல. அவருக்கு பிறகும், அவர்தொடங்கிய பணிகள் தொய்வின்றி நடக்க வேண்டும். அதற்கு சரியான தலைவர்களை அடையாளம்காண வேண்டும். அப்படி அடையாளம் கண்டவர்கள்தான் வரலாற்றில் நிலைத்துநிற்கிறார்கள் டாக்டர் ஹெட்கேவார் மறைவதற்கு முன்பு ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த தலைவராக குருஜி கோல்வால்கர் அவர்கள் இருக்கவேண்டும் என கடிதம் எழுதிவைத்திருந்தார்.
பலருக்கும் அது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 33 வயது இளைஞரான கோல்வால்கரால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை வழி நடத்த முடியும்? இயக்கம் இத்தோடு முடிந்துவிட்டது என்று பலரும் கவலைகொண்டனர். எதிரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால் அந்த கோல்வால்கர் தான்_ தேசப்பிரிவினை, மகாத்மா காந்தி படுகொலை என்ற நெருப்பாற்றை நீந்தி ஆர்எஸ்எஸ்ஸை இந்தியாவின் மிகப் பெரிய இயக்கமாக வளர்த்தெடுத்தார்.
டாக்டர் ஹெட்கேவாரின் தேர்வு எப்படிப்பட்டது என்பதை வரலாறுநிரூபித்தது. டாக்டர் ஹெட்கேவார் 1950-ல் சரியான தலைவரை தேர்வு செய்திருக்காவிட்டால், இந்தியாவின் வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். இன்று பாஜக. ஆட்சியில் இருப்பதற்கு டாக்டர் ஹெட்கேவார் 1925 நாக்பூரில் போட்டவிதைதான் காரணம். அவர் உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ். இயக்கமும். அவர் கண்டுபிடித்த ‘ஷாகா’ என்ற அற்புதமும் நிகழாமல் இருந்திருந்தால் இந்தியா இப்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போல மாறியிருக்கும். தேச நலன் ஒன்றையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டு இறுதி மூச்சுவரை வாழ்ந்த டாக்டர் ஹெட்கேவார் அவரது பிறந்தநாளில் போற்றி வணங்குகிறேன். அவர் காட்டிய பாதையில் பயணித்து, தேச நலனுக்காக என்றும் உழைக்க உறுதியேற்போம்.
நன்றி வானதி சீனிவாசன்
தேசிய மகளீர் அணி தலைவர்
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |