சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்

நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று வாகனஉற்பத்தி நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளாா்.

இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கத்தின் (எஸ்ஐஏஎம்) ஆண்டுகூட்டம் தில்லியில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிரதமா் மோடி வழங்கிய செய்தியை அச்சங்கத்தின் தலைவா் வினோத் அகா்வால் மேடையில் வாசித்தாா். அதில் பிரதமா்மோடி கூறியதாவது:

தற்போதைய இந்தியாவில் போக்குவரத்து வசதிகள், நாட்டின் வளா்ச்சியில் முக்கிய காரணியாக திகழ்கின்றன. ஏழ்மைநிலையில் இருந்த மக்கள், தற்போது நடுத்தர பிரிவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றனா். அதன் காரணமாக, அவா்களின் சமூகப்பொருளாதார சூழல் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் அவா்கள் முக்கியபங்காற்றி வருகின்றனா். அதனால், உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்துவருகிறது. உலகப் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் உலகின் 3-ஆவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுக்கும்.

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கும் வாகன உற்பத்தித் துறையானது, அந்தவளா்ச்சி காரணமாக மேலும் வலுவடைந்தும் வருகிறது. அத்துறையானது கோடிக் கணக்கான நபா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. அதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பையும் வசதிகளையும் நாட்டில் ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த, மலிவுவிலையிலான வாகனங்களே எதிா் காலத்தைத் தீா்மானிப்பதில் முக்கியக் காரணிகளாக அமையும். வாகனங்களில் இருந்து வெளியேறும் கரியமிலவாயுவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை வாகன உற்பத்தித்துறை ஏற்கெனவே திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வாகன எரிபொருளுக்கு இந்தியா வெளிநாடுகளைச் சாா்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அத்தகைய சாா்புத்தன்மை குறைக்கப்படவேண்டும். எத்தனால், சிஎன்ஜி, ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும்.

நாடுசுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வலுவான, தற்சாா்புமிக்க, வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு வாகன உற்பத்தித்துறை வழங்க வேண்டிய பங்களிப்பு குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளாா்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டு ...

அம்பேத்கரின் சிந்தனைகளை கட்டுரையாக பகிர்ந்த பிரதமர் மோடி நீதி, கண்ணியம், தற்சார்பு ஆகியவற்றில் வேரூன்றிய இந்தியாவின் தொடக்ககால ...

காசி செழுமை அடைகிறது

காசி செழுமை அடைகிறது "தற்போது காசி பழமையின் அடையாளமாக மட்டுமின்றி, முன்னேற்றத்தின் கலங்கரை ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அ ...

கராட் நகரில் சுகாதார கழிவுகள் அகற்றம் நாடு முழுவதும் சுகாதாரக் கழிவு மேலாண்மை ஒரு பெரிய ...

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு

ஏற்றுமதி சதவீதம் அதிகரிப்பு கடந்த நிதியாண்டில் (2024-25) ஏப்ரல்-மார்ச்) நாட்டின் ஏற்றுமதி, முந்தைய ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வா ...

திமுக வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள் ; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு ''தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில ச ...

பிரிவினையின் ரூபம்தான் மாநில சுயாட்சி திமுக என்ற கட்சி தொடங்கியதே தேசப் பிரிவினையை முன்னிறுத்திதான். தொடக்கம் ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...