திருவள்ளுவர் மீது தருண்விஜய் கொண்ட அளவற்ற பற்றே திருவள்ளுவர் திருப்பயணம்

 திருவள்ளுவர் திருப் பயணம் என்ற பிரசார யாத்திரையை தருண்விஜய் எம்.பி. தொடங்கி இருப்பது திருவள்ளுவர் மீது அவர்கொண்ட அளப்பரிய பற்றேயாகும் என்று தமிழிசை சவுந்திரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் பாஜக. மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ''திருவள்ளுவர் திருப் பயணம் என்ற பிரசார யாத்திரையை தருண்விஜய் எம்.பி. தொடங்கி இருப்பது திருவள்ளுவர் மீது அவர்கொண்ட அளப்பரிய பற்றேயாகும். திருவள்ளுவரின் புகழை பரப்ப தூய தமிழ்பற்றோடு அரசியல் கலப்பின்றி தமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் வகையில் இந்தயாத்திரைக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

அதனால், இதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ் அறிஞர்கள் வரவேற்றுள்ளனர். இதன்மூலம் ஆரோக்கியமான அரசியலை தருண்விஜய் தமிழகத்திற்கு கொண்டுவந்துள்ளார். திருவள்ளுவரின் திருக்குறள் விளக்கங்களை ஆன்லைன் கட்டுரைகளாக வெளியிடவும் ஏற்பாடுசெய்துள்ளார். இதன் மூலம் திருக்குறளின் புகழ் மேலும் பரவும்.

டெல்லி செங்கோட்டையை பாஜக கைப்பற்றி ஆட்சி அமைத்தது போல் டெல்லி சட்டசபை தேர்தலிலும் பா.ஜ.க அமோகவெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடியை அவதூறாக பேசிவருகிறார். ஆனால் பிரதமர் மோடி, மக்கள் நலனுக்கான திட்டங்களை அறிவித்து பேசுகிறார். இதனால் பாஜக.வின் புகழ் மேலும்மேலும் பெருகிவருகிறது.

தமிழகத்தில் பாஜக. காலூன்றி, வேரூன்றி வருகிறது. இதைக்கண்டு அனைத்து கட்சிகளும் பயப்படுகின்றன. வருகின்ற 2016 சட்ட சபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படும். திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா உருவெடுத்து ஆட்சி அமைக்கும். ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப பாஜக. களம் இறங்கும்.

உள்ளாட்சி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் தேர்தல் களத்தை புறக்கணித்த போதும், பாஜக. மட்டும் துணிவுடன் போட்டியிட்டது. நெல்லை மாநகராட்சி வேட்பாளர் விலைபோன பின்பும் மற்ற மாநகராட்சிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைபெற்றனர். கோவை, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 3ல் ஒருபங்கு வாக்குகளை பெற்று பா.ஜ.க. டெபாசிட்டை தக்க வைத்தது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களும் அங்குபிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளும் விரைவில் விடுவிக்கப்படும் நிலை ஏற்படும். அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியை தழுவியுள்ளது, தமிழர்களுக்கு அவர் இழைத்த அநீதிக்கு சரித்திரம்வழங்கிய தீர்ப்பாகும். இனி இலங்கை–இந்தியா இடையே நல்லுறவு நீடிக்கும் என்று நம்புகிறோம்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

திராட்சையின் மருத்துவக் குணம்

திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...