டில்லி யமுனையில் குளிக்க தயாரா? கெஜ்ரிவாலுக்கு யோகி ஆதிதித்யநாத் சவால்

டில்லி சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார்.

கிராரி பகுதியில் தன் முதல் பேரணியில் ஆதித்யநாத் ஆற்றிய உரை:

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், யமுனையை அழுக்கு வடிகாலாக மாற்றிய பாவத்தை செய்தார்.

நேற்று (நேற்று முன்தினம்), நானும் என் அனைத்து அமைச்சர்களும் மகா கும்பமேளா நடைபெறும் பிரயாகராஜில் உள்ள சங்கமத்தில் புனித நீராடினோம். டில்லியில் உள்ள யமுனையில் தன் அமைச்சர்களுடன் சேர்ந்து குளிக்க முடியுமா என்று கெஜ்ரிவாலிடம் கேட்க விரும்புகிறேன்.

அவருக்கு ஏதாவது தார்மீக தைரியம் இருந்தால் அவர் பதிலளிக்க வேண்டும்.

சாலைகளின் மோசமான நிலை, சுகாதாரமின்மை, குடிநீர் – கழிவுநீர் பெருக்கெடுப்பு பிரச்னைகளை உருவாக்கி டில்லியை ஆம் ஆத்மி சீரழித்தது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா – காஜியாபாத் சாலைகள், டில்லியை விட மிகச் சிறந்தவை.

நுகர்வோரிடமிருந்து மூன்று மடங்கு அதிக மின்சாரக் கட்டணத்தை ஆம் ஆத்மி அரசு வசூலிக்கிறது. ஆனால் அவர்களால் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய முடியவில்லை.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...