ராகுல் காந்தியின் அறிவுரைப்படியே நான் பணிபுரிந்தேன்

 முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியது ஏன் என்று விளக்க மளித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமக்கு இது வேதனையான தருணம் என்று குறிப்பிட்டார். காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்த தாம் 4வது தலைமுறையாக அரசியல் பணி யாற்றி வருவதாக தெரிவித்தார். காமராஜர் காலத்தில் தமிழக முதல்வராக இருந்தவர் தமதுபாட்டனார் பக்தவச்சலம் என்று நினைவுகூர்ந்த அவர், அவரது காலத்திலிருந்து தமது குடும்பம் காங்கிரசிலிருந்து வருவதாக குறிப்பிட்டார். சுற்றுச் சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்ற வில்லை எனவும் குறிப்பிட்டார்.

மேலும் பேசியவர் 30 ஆண்டுகளாக காங்கிரஸில் தாம் பணியாற்றி வருவதாக தெரிவித்தார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்துபணியாற்ற காங்கிரஸ் தமக்கு வாய்ப்பளித்ததையும் பேட்டியில் குறிப்பிட்டார். தமக்கு பணியாற்ற வாய்ப்புதந்த காங்கிரஸ் கட்சிக்கு நன்றி கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார். அர்பணிப்பு உணர்வுடன் தாம் பணியாற்றிய தாகவும் விளக்கமளித்தார். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி வழியில் சுற்றுச் சூழல் அமைச்சராக தாம் பணியாற்றியதாகவும் கூறினார். சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதே இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் விருப்பமாக இருந்ததாக தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வுடன் முழுமையாக பணியாற்றியதாக தெரிவித்த அவர், சட்டத்திற்கு புறம்பாக தாம் பணியாற்றவில்லை எனவும் குறிப்பிட்டார்.
..

பெரும் முதலீடு கொண்ட திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது ஏன் என்று ஜெயந்தி நடராஜன் விளக்னமளித்தார். இதுகுறித்து பேசிய அவர் ஒரு சிலதொ-ழில் திட்டங்களுக்கு அனுமதி மறுத்தது உண்மைதான் என்ற அவர், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார். தமதுமுடிவுகளை அமைச்சரவை சகாக்கள் பலர் எதிர்த்ததாகவும் குறிப்பிட்டார். மேலும்பேசிய அவர் கடந்த 2013 டிசம்பரில் பிரதமர் மன்மோகன் அழைத்து தம்மை பதவி விலக உத்தரவிட்டதாகவும், உத்தரவையடுத்து அரை மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்ததாகவும் குறிப்பிட்டார்.

பதவியை ராஜினாமாசெய்ததை தொடர்ந்து தம்மை குறிவைத்து கடுமையாக விமர்சனம் எழுந்ததாக கூறிய அவர், தம் மீது கூறப்பட்ட எந்த புகாரும் நிரூபிக்கப்பட வில்லை என்று குறிப்பிட்டார். அமைச்சர் பதவியிலிருந்து விலகியபிறகு கட்சி பணியிலும் தாம் ஓரங்கட்டப்பட்டதாக வேதனை தெரிவித்தார். தாம் ஓரங்கட்டப்பட்டது ஏன் என்று கட்சிதலைமை எந்த விளக்கத்தையும் அளிக்க முன்வர வில்லை,

சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அனுமதி மறுத்ததற்கான காரணம் பற்றி மோடி விசாரித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சராக இருந்தபோது தாம் எந்த ஊழலும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் அறிவுரைப்படியே தாம் பணிபுரிந்ததாக தெரிவித்தார். மேலும்பேசிய அவர் தாம் தவறு செய்திருந்தால் தம்மை தூக்கில் போடட்டும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...