கேரள மாநிலத்தில் பா.ஜனதா சார்பாக கேரள பாதுகாப்பு பாதயாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது .கேரள மாநிலம் முழுவதும் சென்று வந்த பாதயாத்திரை நேற்று திருவனந்தபுரத்தில் முடிவடைந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சுஷ்மா சுவராஜ் பேசியதாவது :-
கேரளாவில் மாறிமாறி ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் மக்களுக்கு எதையும் செய்யவில்லை. இவர்களை-விட்டால் வேறு எந்த கட்சியும் இல்லை என்கிற மாயை உருவாக்கபட்டுள்ளது.
இதனை உடைத்து எறிய வேண்டும். இந்த-இரண்டு கட்சிகளின் ஆட்சி காலத்தில் கேரளா சுரண்டப்பட்டு இருக்கிறது . பொறுப்பில் உள்ளவர்களே ஊழல் புகார்களில் மாட்டுகிறார்கள் . தங்களை நிரபராதி என நிரூபிக்க அவர்களால் முடியவில்லை., பாலியல் மற்றும் கறுப்பு பண விவகாரங்களில் , கம்யூனிஸ்டு ,காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கிறது .
வருகிற தேர்தலில் பாரதிய .ஜனதா வெற்றிபெற்று கேரள சட்டசபைக்குள் நுழையும். அங்கு நமது குரல் ஒலிக்கும். மக்கள் நலனுக்காக பாரதிய ஜனதா இன்னும் பல போராட்டங்களை முழுவீச்சுடன் நடத்தும் என்று அவர் பேசினார்.
நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ... |
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.