புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்

 ஸ்ரீரங்கம் தொகுதியில் 9,000 போலி வாக் காளர்களை நீக்கி விட்டு, புதியவாக்காளர் பட்டியல் வெளியிடா விட்டால் இடைத் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக் சேனாவை தலைமை செயலகத்தில் திங்கள் கிழமை சந்தித்த அவர் இது தொடர்பாக அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

வரும் 13-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் கட்சியினர் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி செயல்பட்டு வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் நகரில் விஸ்வேஸ்வரம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்த பாஜக வேட்பாளர் எம். சுப்பிரமணியம், திருச்சி மாவட்டத் தலைவர் பார்த்திபன், மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளுக்கு மாறாக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக, திமுகவை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் ஸ்ரீரங்கம் தொகுதியில் குவிந்துள்ளனர்.

அனுமதிபெறாத நூற்றுக் கணக்கான வாகனங்கள் தொகுதிமுழுவதும் வலம்வந்து கொண்டிருக்கின்றன. இதனால் தொகுதி மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அமைதியாக தேர்தல் நடைபெறுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இது குறித்து பாஜக சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. ஸ்ரீரங்கத்தில் தேர்தல் அமைதியாக நடைபெற நடத்தைவிதிகளை கண்டிப்புடன் நடை முறைப்படுத்த வேண்டும், அனுமதிபெறாத வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும்.

பா.ஜ.க நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள 9,000 போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கி விட்டு புதியபட்டியல் வெளியிட வேண்டும்.

இல்லையெனில் வரும் 13-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.

வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...