டெல்லி சட்டப் பேரவை தேரதல்முடிவு குறித்து பிரதமர் மோடியை விமர்சித்து உத்தவ்தாக்ரே பேசியதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள பாஜக, முதலில் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள் பிறகு மோடியை தாக்கிபேசலாம் என்று சவால் விடுத்துள்ளது.
டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு குறித்து நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மும்பையில் நிருபர்களிடம் கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-டெல்லி சட்டசபை தேர்தல் முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் தோல்வி என்று கூறுவதில், எந்த தவறும் இல்லை. மோடி அலை நாட்டை துடைத்தெறிந்து விட்டதாக சமீபநாட்களாக பேசப்பட்டு வந்தது. ஆனால், அலையை விட சுனாமி வலிமையானது என்பதை டெல்லி மக்கள் உணர்த்திவிட்டார்கள்" என்று கூறியிருந்தார்.
உத்தவ் தாக்கரேவின் மேற்கண்ட கருத்துக்கு கடும்ஆட்சேபம் தெரிவித்துள்ள மும்பை பாஜக தலைவர் ஆஷிஷ்சேலர், கூட்டணியை விட்டு வெளியேறி விட்டு மோடியை விமர்சியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- "டெல்லியில் என்ன நடைபெறுகிறது என்று கவனிப்பதற்கு பதிலாக உத்தவ்ஜி முதலில் மும்பையிலும் மகாராஷ்டிராவில் என்ன நடைபெறுகிறது என்பதை கவனிக்கட்டும். இந்ததேர்தல்(டெல்லி) பொது தேர்தல் அல்ல. இது ஒருமாநில தேர்தல், எனவே நரேந்திர மோடியின் பெயரைகொண்டு வருவது என்ற கேள்வியே இதில் எழவில்லை. பாரதீய ஜனதாவின் மிகப் பெரும் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் உள்ள மோடி மீது நீங்கள் பழி சுமத்த விரும்பினால், எங்கள் அரசுடன் இணைந்து இருக்காதீர்கள். துணிச்சல் இருந்தால் முதலில் அதிகாரத்தில் இருந்து விலகிவிட்டு பிறகு மோடியை சுட்டிக் காட்டுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.