ஸ்ரீகுருஜி கோல்வல்கரின் நண்பர் ஒருவர் திடீரென யோகியாக ஆசைப்பட்டார். சில நாட்கள் வரை அவரை வெளியிலேயே காணோம். ஆகவே அவரைச் சந்திக்க ஸ்ரீ குருஜி சென்றார். நண்பர் வீட்டில் ஒரு அறைக்குள் கதவைச் சாத்தி தாளிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தார். ஸ்ரீ குருஜி கதவைத் தட்டினார், திறக்கப்பட்டது. உள்ளே ஒரே இருட்டு, குப்பை, அழுக்கு.
"என்னை ஏன் தொந்தரவு பண்ணுகிறாய், கடவுளைக் காண விரும்புகிறேன்" என்று அந்த நண்பர் சிணுங்கினார்.
அமைதியாக ஸ்ரீ குருஜி, "நண்பனே! முதலில் ஜன்னல்களை எல்லாம் திற. அறையைச் சுத்தமாக வை. நீயும் தூய்மையோடு இரு. இல்லாவிட்டால் கடவுள் இங்கு வர விரும்பினாலும் நடுநடுங்கிப் போய் ஓடி விடுவார்!" என்றார்.
வெளித் தூய்மையை ஏன் கவனிக்கிறாய், உள்ளம் தானே முக்கியம்?
என்று சிலர் வாதிடுகிறார்கள். உள்ளிருப்பதன் பிரதிபலிப்பு தானே வெளியில் தெரிகிறது?
அனைத்தும் கடந்த நிலையில் போனவர்களைத் தவிர,
மற்ற எல்லோரும் புறத்தூய்மையைப் போற்றியாக வேண்டும்.
அதனால் நமக்கு மட்டுமல்ல, நமது சமுதாயத்துக்கே நாம் தொண்டு செய்கின்றோம்.
நன்றி ; விஜய பாரதம்
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.