இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவின் இந்தியவருகை, இந்தியா- இலங்கை நல் உறவுக்கான மற்றொரு புதியதொடக்கமாக அமையும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் 1998 பிப்ரவரி 14ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தினத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மத்திய கனரக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை வந்தார்.
கோவை ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர்கூறியது: இலங்கை அதிபர் மைத்ரி பால சிறி சேனாவின் இந்தியவருகை, இந்தியா-இலங்கை உறவுக்கான நல்ல ஒருதொடக்கமாக அமையும். இலங்கை தமிழர் மற்றும் தமிழக மீனவர் உரிமைகளை காக்க பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார். அதற்கேற்ப இலங்கை அதிபரின்வருகை, இலங்கை தமிழர்களுக்கு ஒரு புதியவழியை காட்டும்.
இலங்கை பிரச்சினையை வைத்து சில அரசியல் கட்சியினர் போராட்டங்களை நடத்தி பிழைப்பு நடத்தவேண்டிய சூழ்நிலையில் உள்ளனர். அவர்கள், அரசு நடத்த தயாராக இல்லை.
இலங்கை தமிழர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது, ஆனால், தமிழர்கள் சர்வ உரிமை மற்றும் அதிகாரத்துடன் வாழ பாஜக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது, கடந்தமுறை பதவி விலகியதற்காக அர்விந்த் கேஜ்ரிவால், மக்களிடம் கேட்ட மன்னிப்புக்கான அங்கீகாரமே ஆகும். பாஜக கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகளை பெற்றிருப்பதால் இதை தோல்வியாகக் கருத முடியாது என்றார்.
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.