தமிழக பாஜக.,வில் இது வரை 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்

 தமிழக பாஜக.,வில் இது வரை 22 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தெரிவித்தார்.

உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெள்ளிக் கிழமை சென்னை திரும்பிய தமிழிசை நிருபரிடம் கூறியது:

கடந்த மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிக உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என்ற இலக்குடன் நாடுமுழுவதும் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

தமிழக பாஜகவில் இது வரை 22 லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இது கடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளை விட அதிகமாகும்.

இந்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதை அமித்ஷா பாராட்டினார். உறுப்பினர் சேர்க்கைக்காக கிராம கமிட்டி அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைவரும் உற்சாகத்துடன் செயல் பட்டு வருகின்றனர். எனவே, 60 லட்சம் உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்ற இலக்கை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

வரும் மார்ச் 5-ம் தேதி கோவையில் நடைபெறும் உறுப்பினர்சேர்க்கை தொடர்பான ஆய்வு கூட்டத்தில் தேசியத்தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். அதில் ஒன்றிய அளவில் உள்ள பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் தமிழிசை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...