கள்ளக் குறிச்சி தமிழக அரசு வழக்கை வழிநடத்திச் செல்லும் முறை சரியாக இல்லை

கள்ளக் குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சௌந்தர ராஜன், திருப்பதி நாராயணன் உள்ளிட்ட பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது ஆளுநரிடம், கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என அண்ணாலை வலியுறுத்தியதாக தெரிகிறது.

ஆளுநரை சந்தித்தபிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “பாஜக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்து சிலகோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம். கள்ளக் குறிச்சியில் விஷச் சாராயம் அருந்தி இறந்து கொண்டிருப்பதும், நூற்றுக் கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதும், தமிழ்நாடு அரசு அந்தவழக்கை வழிநடத்திச் செல்லும்முறை சரியாக இல்லை என்பது எங்கள் கருத்து. இந்தக் குற்றத்தில் திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இந்தவழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால், இதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இந்த விசாரணை மாநில அரசைத் தாண்டிச் செல்லாது” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.