ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், மறு வாழ்வுத் திட்டங்களுக்கு உதவி செய்யவும் இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனிக்கு மோடி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனிச் சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்ததை நினைத்து மிகுந்த வேதனை அடைகிறேன்.
இந்திய மக்களுக்கும், ஆப்கானிஸ் தான் மக்களுக்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளதால் இந்த நிகழ்வு எங்களைக் கவலையடைய செய்துள்ளது. உயிரிழந்த வர்களுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்வோம். இந்த அழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்க உங்களுக்கு (அதிபர்) முழுவலிமை உண்டு என நம்புகிறேன்.
மீட்பு, மறுவாழ்வு, வீடுகளை கட்டுவது உள்ளிட்ட எந்தஉதவியாக இருந்தாலும் செய்ய தயார். என்று அந்தக் கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.