மோரீஷஸ்க்காக இந்தியா சார்பில் உருவாக்கப்பட்ட கடற்படை ரோந்து கப்பலை பிரதமர் தொடக்கி வைத்தார்.
"பராகுடா' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ரோந்து கப்பலில் நவீன தானியங்கி துப்பாக்கிகள் பொருத்தப் பட்டுள்ளன. சுமார் 1,300 டன் எடையில், கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்ட அந்தக்கப்பல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோரீஷஸ் நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த ரோந்துக்கப்பலின் செயல்பாட்டைத் தொடக்கிவைக்கும் நிகழ்ச்சி போர்ட்லூயிஸ் துறைமுகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனைத் தொடக்கி வைத்து மோடி பேசியதாவது:
பண்டைய காலங்களில் இந்திய பெருங் கடல் வழியாக வர்த்தகம் நடைபெற்றது. அப்போது கப்பல்கள் பருவ கால காற்றின் உதவியால் இந்திய கடல்பகுதியில் பயணம் செய்தன.
எதிர்காலத்தில் இந்திய பெருங் கடல் மிகவும் நெருக்கடி மிகுந்ததாக இருக்கும். உலகின் எண்ணெய் கப்பல்களில் மூன்றில் இரண்டுபங்கும், பெரிய சரக்குகப்பல்களில் மூன்றில் ஒருபங்கும், கண்டெய்னர் போக்குவரத்தில் பாதி அளவும் இந்திய பெருங் கடல் பகுதியில் பயணிக்கும்.
எனவே நம்பகத்தன்மை, வெளிப்படைத் தன்மை ஆகிய சூழலே நமது இலக்காக இருக்க வேண்டும். சர்வதேச கடல்சார் விதிகளையும், நடைமுறைகளையும் அனைத்து நாடுகளும் மதிக்கவேண்டும். இதர நாடுகளின் நலன்களையும் கருத்தில் கொள்ளவேண்டும். கடல்சார் பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வுகாண வேண்டும். கடல் சார் நட்புறவை அதிகப்படுத்த வேண்டும்.
இந்தவகையில் மொரீஷியஸ் நாட்டுக்கு இதில் முக்கியபங்கு இருக்கிறது. எனது கொள்கைகளில் இந்திய பெருங் கடலுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன். இந்திய பெருங் கடல் பகுதியில் உள்ள நிலப்பகுதிகளையும், தீவுப் பகுதிகளையும் பாதுகாக்க நாங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தீவுகளையும் பாதுகாப்போம்.
உலகில் இந்தியாவின் கடல்சார் நட்புநாடுகளில், மொரீஷியஸ்தான் வலிமையான கடல்சார் நட்பு நாடாக உள்ளது. இந்திய பெருங்கடலின் எதிர் கால பாதுகாப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றில் மொரீஷியஸ் முக்கிய பங்கு வகிக்கவேண்டும். இந்திய கடல் எல்லை நாடுகள் சங்கத்தின் (ஐ.ஓ.ஆர்.ஏ.) தலைமை செயலகம் அமைப்பதற்கு மொரீஷியசைவிட வேறு சிறந்த இடம் இருக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.