இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கடற்படையினர் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திரமோடி, செஷல்ஸ், மோரீஷஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதற்கான தனது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தை கடந்த 9-ம் தேதி தொடங்கினார்.
அதன்படி செஷல்ஸ், மோரீஷஸ் உள்ளிட்ட நாடுகளில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட அவர், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானம் மூலம் வெள்ளிக் கிழமை அதிகாலை 5.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை வந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை மோடிக்கு கிடைத்தது.
இதன் பின்னர், கொழும்பு விமான நிலையத் திலிருந்து கார் மூலமாக இலங்கை அதிபர் மாளிகைக்கு மோடி சென்றார். அங்கு அவரை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து, இலங்கைக் கடற்படையினர் மோடிக்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு முறை வரவேற்பு அளித்தனர். பின்னர், கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றுக் கொண்டார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.