இந்தியா – இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள்

 இந்தியா – இலங்கை இடையே பல்வேறு அம்சங்கள் குறித்து நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொழும்பில் இது தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அதிபர் சிறீ சேனா ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தனர்.

இதில் நரேந்திர மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே விசா, சுங்கம், இளைஞர்கள் மேம்பாடு, இலங்கையில் இந்திய கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் சிலையை நிறுவுவது ஆகியவை தொடர்பாக 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சுங்க வரி ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக நடை முறைகள் எளிமைப் படுத்தப்படும்.

இலங்கையின் திரிகோண மலையை பெட்ரோலிய வர்த்தக மையமாக மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலும், இலங்கையின் ரயில்வே துறை மேம்பாட்டுக்கு ரூ.1,820 கோடியை இந்தியா வழங்கும்.

இலங்கை நாணய மதிப்பு, ஸ்திரத்தன்மையுடன் விளங்குவதற்காக இந்திய ரிசர்வ்வங்கி – இலங்கை சென்ட்ரல் வங்கி இடையே ரூ.9,000 கோடி மதிப்பில் செலாவணி பரி மாற்ற ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்திய-இலங்கை மீனவர் பிரச்னை இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இது, இருதரப்பு மீனவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாகும். இதனை மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டியுள்ளது.

எனவே, இருநாடுகளை சேர்ந்த மீனவ பிரதிநிதிகளும் விரைவில் சந்தித்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வைக் காணவேண்டும். இதற்கு தேவையான உதவிகளை இந்திய அரசு அளிக்கும் என்றார் மோடி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...