காஷ்மீர் தீவிரவாதிகளின் அட்டூழியம்

ஒரு காலத்தில், இந்தியாவின் தலைசிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கருதப்பட்டதும், இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று வருணிக்கப்பட்ட நகரமுமான காஷ்மீரில், இன்று திரும்பிய திசையெங்கும் வன்முறைகளும், கலவரங்களும்தான் அரங்கேறிவருகின்றன.

இப்பிரச்னையை அரசியலாக்கி, அதில் ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என்ற ரீதியில்தான் அரசியல் கட்சிகளும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இதனால், அங்கு அமைதி ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லாமல் போய்விட்டது.சமீபத்தில், எந்த தவறுமே செய்யாத இரண்டு இளம் பெண்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையும் கூட, காஷ்மீரில் உள்ள சில அமைப்புகள் பத்தோடு பதினொன்றாகத்தான் கருதுகின்றன.
காஷ்மீர் சோபூரை சேர்ந்தவர் குலாம் நபி தர். இவரது மகள் அரிபா மற்றும் அக்தரா. கடந்த ஜன., 31ம் தேதி, தன் மாமா வீட்டில் இருந்த அரிபா (17), சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரைக் காண, அவரது அக்கா அக்தரா, இளைய சகோதரர் மற்றும் தாய் பரீசா வந்திருந்தனர். குலாம் நபி தர், தொழுகைக்காக மசூதி சென்றுவிட்டார்.அப்போது, அவர்களது வீட்டிற்கு முகமுடி அணிந்து வந்த இருவர், அரிபா மற்றும் அக்தராவை வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து சென்று, சிறிது நேரத்தில் சுட்டுக் கொன்றனர். இருப்பினும், இந்த கொடூரக் கொலைக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பினர்தான் செய்ததாக கூறிவிட்டு சென்றனர்.

தன் மாமா வீட்டில் மீன்களை சுத்தம் செய்து கொண்டிருந்த அக்தரா, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியானதை அவரது அத்தை சரேபாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. மொபைல் போன் என்றால் என்ன? சிம் கார்டு என்றால் என்ன என்று கூட அவர்களுக்கு தெரியாதே. அரிபா, தன் பாக்கெட்டில் தன் தலை முடியை கட்டுவதற்காக ரப்பர் பேண்டு மட்டுமே வைத்திருந்தாள். அவர்களது போட்டோ கூட என்னிடம் இல்லையே என்று கதறினார். ஒரு சாதாரண குடும்பத்தில் பயங்கரவாதிகள் புகுந்து இரண்டு கொலைகளை செய்துவிட்டு செல்லும் அளவிற்கு அவர்கள் என்ன குற்றம் செய்துவிட்டனர்? காஷ்மீரில் இதுபோன்ற சம்பவங்கள் ஒன்றும் புதிதல்ல, அங்கிருக்கும் அப்பாவி மக்கள் ஒவ்வொரு நாளையும் மிகவும் பயத்துடனேயே நகர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

தன் இரண்டு மகள்களையும் இழந்த பரீசா, கடந்த 93, ஆகஸ்டில், தன் சகோதரர் முகம்மது சுல்தானை இழந்தார். சுதந்திரதினக் கொண்டாட்டத்தில் அவர் ஈடுபட்டதால், பயங்கரவாதிகள் அவரை சுட்டுக் கொன்றனர். அதே ஆண்டு நவம்பரில், தாரின் சகோதரர் கஜிர் முகம்மது, ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையின் போது கொல்லப்பட்டார். “”எங்கள் குடும்பத்தை சேர்ந்த பலர், பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகியுள்ளனர். இன்னும் எந்தவிதமான தியாகத்தை இந்த அரசு எதிர்பார்க்கிறது என தெரியவில்லையே” என, கதறுகிறார் மகள்களை இழந்த பரீசா.

மகள்களை இழந்த தந்தை தர் கூறுகிறார்; ” ஹுரியத் மாநாட்டு கட்சியினர், ஜாபீர் ஷா, யாசின் மாலிக், என ஒவ்வொரு அமைப்பினரும் எங்கள் வீட்டுக்கு வருகின்றனர்; என்ன நடந்தது என்று கேட்கின்றனர், நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவிக்கின்றனர். அத்தோடு தங்கள் கடமை முடிந்தது என கருதி சென்று விடுகின்றனர். உதவி என்று வரும் போது யாருமே எட்டிக்கூட பார்ப்பதில்லை. பிணங்களுடன் வரும் போலீசார், வழக்கு பதிவு செய்வதோடு நிறுத்திக் கொள்கின்றனர் என்றார் விரக்தியுடன்.

தரின் வீட்டில் இன்று நடந்தது நாளை நம் வீட்டிலும் நடக்கலாம், யார் கண்டது? என்கிற அச்சம் அப்பகுதியில் நிலவிவருகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக இப்படிப்பட்ட கொடுமைகளைத் தான் அனுபவித்து வருகின்றனர் சோப்பூர் பகுதி மக்கள்.ஆனால், தர் வீட்டில் நடந்த சம்பவங்களை ஏதோ இயற்கை பேரழிவு நடந்து விட்டதாகத்தான் மாநில அரசு கருதுகிறது போலும். டில்லியில், பத்திரிகையாளர்களிடம் பேசிய முதல்வர் ஒமர் அப்துல்லா, நாங்கள் குற்ற உணர்வுடன் இருக்கிறோம். ஏதேனும் சிறிய தடயங்கள் சிக்கினாலும் ஒட்டுமொத்த காஷ்மீரே நியாயம் கிடைக்க கொதித்தெழும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...